பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி: இ.பி.எஸ்.,

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
CoronaVirus, Tamilnadu, CM, EPS, Palanisamy, கொரோனா வைரஸ், முதல்வர், இபிஎஸ், பழனிசாமி, கூடுதல் நிதி,

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை. அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளன. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


latest tamil newsகொரோனா தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும்.

கொரோனா தடுப்பு பணி தமிழகத்தில் முழு வீச்சில் நடைபெறுகிறது. கொரோனாவால் தமிழகத்தில் ஒரு உயிரை கூட இழக்க அரசு அனுமதிக்காது. பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக விமான நிலையங்களில் 2,05,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 198 பேர் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 54 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் முழு அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்களை தமிழக அரசு சார்பில் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
24-மார்-202001:42:47 IST Report Abuse
G.BABU அந்த நிதியும் , கமிஷன், கொள்ளை என கரைந்துவிடும் .....அது கொரோனா ஊழல் என்றழைக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-202022:01:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 500 கோடியை தனியா ஒதுக்கி வெச்சிக்கிட்டாராம். வைரசாலே பிசினஸ் டல்லு இல்லே. லஞ்ச வசூலும் கொறஞ்சிடிச்சி. அதான் ஸ்பெஷல் கொள்ளை. நீங்க நடத்துங்கப்பு.
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
23-மார்-202020:39:54 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     உங்கள் ஊரில் எப்படி இப்படி வெளிப்படையா """ ஹைட்ராக்சி குளோரோகுயின்"" என்று வெளி இடுகிறார்கள் தெரியவில்லை அனால் ஒன்று இது கண்டிப்பாக இப்போ எந்த கடையிலும் கிடைக்காது பயம் வேணாம் , ஏன் எனில் உங்கள் ஊரில் DR preion இல்லாமல் மருந்து கடைக்காரன் மருந்து தந்து விடுவான் இங்கே என்ன பிஸ்தா இருந்தாலும் நீ DR பார்த்தபிறகு உன் வீட்டிற்கு அருகே உள்ள மருந்து கடையில் தான் வாங்கணும் அவனும் உடனே கொடுத்து விட மாட்டான் உன் பேர் சில DOB போன்றவரை கேட்டபிறகு மேலும் ஒரு PHARMACIST தான் கொடுப்பார் அதை விளக்குவார் அப்புறம் ஒன்னு சொல்லுவார் இந்த டோஸேஜ் நடுவில் நிறுத்திவிட்டால் டெஸ்டரொய் செயின்கள் என்று சொல்லி கொடுப்பார் ஒரு amoxcilin இதற்கே பயப்படுவார் ஆனா நம் மருந்து காரர் உடனே எடுத்து கொடுப்பார் , ஆகவே நீங்கலாக சென்று உடனே இதை வாங்கலாம் என்று எண்ணாதீர்கள் எனக்கு தெரிந்து இது கிடைக்காது உங்களுக்கு தெரியும் இந்த குளூரோகுய்ன் என்பது நாம் மலேரியா ஜுரம் வந்தா கொடுப்போம் என் எனில் இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின் 200 mg மேல் உபயோகித்தால் தீங்கு ( நான் விவரிக்க விரும்பவில்லை ) நைஜீரியாவில் இது வேறுமாதிரி விளைவு என்று கேள்வி பாடோம் அஃகவே நீங்களே வாங்கி கொள்ளாதீர்கள் நண்பர்களே முறையான Dr சொன்ன பிறகு இறங்குங்கள் , டிரம்ப் என்ன Dr இல்லையே இதை ஏன் அமெரிக்கன் மெடிக்கல் கவுன்சில் சொல்லவில்லை அவர் நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி உடனே மருந்து உள்ளது என்று சொல்லை வாயை அடைக்க பார்க்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X