வக்கீல்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம்; சுப்ரீம் கோர்ட்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement



latest tamil news



புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க்கும் வகையில், சப்ரீம் கோர்ட் நீதிபதி அவசர வழக்குகளுக்காக மட்டும் காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news



சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது: "வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டாம். மறுஉத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும். வழக்கறிஞர்கள் அறைகளை இன்று மாலை 5மணியுடன் மூட வேண்டும். கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை. அவசர வழக்குகளுக்காக மட்டுமே, வீடியோ காணொலி மூலமாக வீட்டிலிருந்தே வழக்கறிஞர்கள் வாதிடலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கைதிகளுக்கு பரோல்

கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு அமைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-மார்-202005:39:14 IST Report Abuse
 nicolethomson ரியல் எஸ்டேட் பிசினெஸ் இனி கொடிகட்டி பறக்கும்
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) CAA னு போராட்டம் செய்யும் மூர்க்க கூட்டத்தை ஒழிக்க முதலில் ஆர்டர் போடுங்கள் அடிபணிய மறுத்ததால் நாடு கடத்துங்கள்
Rate this:
Cancel
23-மார்-202022:23:27 IST Report Abuse
நக்கல் இவங்க சாதாரணமாகவே கோர்ட்டுக்கு போகவேண்டாம், ஒரு சிலரை தவிர... எப்படியும் திருட்டு பசங்களை காப்பாத்ததான் வாதாடுவார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X