பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சுறுத்தல்: மாவட்ட எல்லைகள் மூடல் ?

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
CoronaVirus, District, Lockdown, Chennai, Erode,CM, Palanisamy, EPS, கொரோனா வைரஸ், மாவட்டஎல்லைகள், மூடல், முதல்வர், இபிஎஸ், பழனிசாமி, ஆலோசனை

சென்னை: கொரோனா பாதித்த மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியபடி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்களை முடக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த பட்டியலில் திருநெல்வேலி, கோவையும் சேரும் என கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் மாவட்டங்களை முடக்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


latest tamil news



இந்நிலையில், ஈரோடு - நாமக்கல் எல்லைப்பகுதியை மூட நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இரு மாவட்டத்திற்கான அனைத்து போக்குவரத்தும் முடக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள், பரிதவித்து வருகின்றனர். இதனால், கொரோனா பாதித்த மாவட்டங்களில் உள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றனர்.


latest tamil news



இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் 3 மாவட்டங்களையும் முடக்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், 3 மாவட்ட கலெக்டர்களும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்டங்களை தனிமைப்படுத்த விதிக்கப்பட இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாவட்டங்களை முடக்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-மார்-202020:36:15 IST Report Abuse
அசோக்ராஜ் திராவிஷர்களுக்கு இயக்கத் தெரியாது. முடக்கத்தான் தெரியும். சந்தோசமாக செய்வார்கள். தினக்கூலி கள் பிழைக்க வழியில்லை. இலவசம் தருகிறோம்னு சொல்லி கோடிகளில் ஆட்டையைப் போடுவார்கள். ரெண்டு தரப்பும் பங்கீடு செய்து புகார் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பாருக்குள்ளே நல்ல நாடு.
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
23-மார்-202015:09:37 IST Report Abuse
Vijay சுடலை எப்படியோ ஸ்பை வச்சி தெரிஞ்சிக்கிட்டு முந்திக்கிச்சி ... இப்போது திமு கழகத்தின் அழுத்தத்தால் னு பிட் போடும்
Rate this:
Cancel
23-மார்-202013:13:10 IST Report Abuse
ஆப்பு தெருத்தெருவா முடக்குங்க... பீதியே வாணாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X