பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டின் நிலைமை என்ன? கலெக்டர் விளக்கம்

Added : மார் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
erode, collector, kathiravan, corona, hospital, 13, கொரோனா, ஈரோடு, கலெக்டர், கதிவரன், மருத்துவமனை, வெளிநாட்டினர்,
தகவல், மறைக்க,

ஈரோடு: கொரோனா வைரஸ் தொற்றால் ஈரோடு மாவட்டத்தில் 13 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளை கையாள்வதற்காக பெருந்துறையில் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படும் என ஈரோடு கலெக்டர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கலெக்டர் கதிரவன் கூறியதாவது: "ஈரோடு மாவட்டத்தில் 13பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து மார்ச்-1 க்கு பிறகு வந்தவர்களது விபரம் தெரிந்தால், அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் உங்களது நண்பர்கள், உறவினர்கள் யாராக இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவலை மறைக்க கூடாது. கொரோனா அறிகுறி இருந்தால், 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். பஞ்சாயத்து தலைவர்கள், வி.ஏ.ஓ., சுகாதார துறையினர் உள்ளிட்ட குழு அமைத்து பாதிப்புகளை தீவிரமாக கண்டறிந்து வருகிறோம். தேவையற்ற பயணங்களை தவிர்த்து அனைவரும் வீட்டிலேயே தனிமையில் இருப்பது நல்லது. அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொணடு செல்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம்."

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மார்-202003:07:35 IST Report Abuse
 nicolethomson இன்றைய நிலையில் ஒரு தெருவினை இவர்கள் பகிஷ்கரித்தால் போதும் ஈரோடு தப்பித்து விடும்
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
24-மார்-202011:11:43 IST Report Abuse
Vivekanandan Mahalingam UNMAI
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X