பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
TamilNadu, 144, CoronaVirus, CM, EPS, தமிழ்நாடு, தமிழகம், 144 தடை, உத்தரவு, கொரோனா, மாவட்ட எல்லை, மூடல், முதல்வர், பழனிசாமி, இபிஎஸ்,

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவு: பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.


latest tamil newsஅத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு 144 தடை உத்தரவு இல்லை. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து, காய்கறி, பால், மளிகை போன்ற கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்படும். வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம்.
அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. இந்த தடை நாட்களில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி இயங்காது. கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கைகள் இன்று மாலை அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news
புதுச்சேரியில் 144

புதுச்சேரியில் இன்று (மார்ச் 23) இரவு 9 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், தடை காலத்தில், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்-202000:20:41 IST Report Abuse
Janarthanan அதே போல் அத்தியாவசிய பொருட்கள் பால் காய் கரி மளிகை போன்றவைகளை வாகனத்தில் விற்க வேண்டும் , ஒவ்வரு ஏரியா க்கு ஓவ்வரு அரசிடம் அனுமதி வாங்கி வாகனம் மட்டுமே செல்ல வேண்டும், அந்த ஏரியாவில் ஒரே நேரத்தில் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க வழி செய்யலாம் ??? மக்கள் வெளியில் வருவதை நிறுத்தி விடலாம் , ஒரு படி மேல் போய் பொருட்கள் விளையும் பிஸ் பண்ணி விடலாம் ???
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
23-மார்-202021:54:55 IST Report Abuse
Sheri மாண்புமிகு முக்கிய மந்திரி அவர்கள் நாட்டு மக்கள் அனைவரின் வங்கி கணக்கில் ருபாய் 15 லட்சம் போடுவதற்கு இதுவே சரியான தருணம். தனது வெளிநாட்டு பயணம் செய்யும் செலவு இப்போது மிச்சம். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
23-மார்-202021:50:35 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     சீனாவின் விஷத்தனத்தை பாருங்கள் அவன் ஊரில் என்ன நடந்தது என்று வெளியே சொல்லவில்லை இங்கு ஒரு Dr அந்த ஊரில் இந்தமாதிரி பாதிக்க பட ஒருஐந்து பேரை வெளி உலகிற்கு கொண்டு வந்து ( பயங்கர பாதுகாப்புடன் ) ஐந்து பெரிய நாடுகளின் Dr களின் கண்காணிப்பில் விட்டு இருந்தால் எந்த நாடு மருத்துவர் ஆவது மருந்து கண்டுபிடித்து இருஅப்பார் அவன் ஊரில் இப்போ குறைந்து விட்டது அவன் தயாராகி விட்டான் அவன் பொருள் தான் முக்கியமா tissue அவன் தான் சப்ளை இப்போ அவன் சொல்லும் ரேட் தான் இப்போ தான் நமக்கு இந்த நோயின் குணம் இதற்கே உங்கள் பங்கு சந்தை வீழ்ச்சி இப்போ அவன் சூப்பர் பவர் ஆகி உலகத்தியே சீனர்களை நோக்கி திரும்ப வைக்க போகிறான் உறுதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X