கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு; பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
+1,+2 examination,பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள், 30 நிமிடம், தாமதம்

சென்னை : மார்ச்-26ல் நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளை நடைபெற இருக்கும் பிளஸ் டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். நாளை (மார்ச்-24 )முதல் 31 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். நீதிமன்றங்கள், மின்சாரவாரியம், குடிநீர் , ஆவின் பால், உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு தடையில்லை. பெட்ரோல், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள, காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே திருமண மண்டபங்களில் நடக்க அனுமதி. 30பேர் மட்டுமே அதில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக,'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, அத்தியாவசிய பொருட்களான, முக கவசம் மற்றும் கிருமி நாசினி கிடைப்பதை உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.


latest tamil news




நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:30க்கு துவங்கி மதியம், 1:45 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு மையங்களை அடைவதற்கு, பிரச்னையை சந்திக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து, குறித்த நேரத்துக்கு மாணவர்கள் வந்து சேர, போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை தவிர்த்து, இந்த கட்டத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது, மாணவர்களின் நலன்களை பாதிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-மார்-202022:21:06 IST Report Abuse
அசோக்ராஜ் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்றால் தெரியாது. நீதிபதிகளின் ஆட்சி நடப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சட்டசபையையும் ஆட்சியர் அலுவலகங்களையும் கலைத்து விட்டு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை கூட்டுங்கள். மக்கள் அலைச்சல் இல்லாமல் ஒரே வர்கத்துடன் போராடி சாகலாம். பல முனை எதிரிகளுடன் போராடுவது அயற்சியாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
23-மார்-202020:28:28 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நீதிக்காக ஏற்படுத்தப்பட்ட துறை அரசின் நிர்வாகத்துறையையும் சேர்த்து கவணிப்பதில் மிக அக்கரை கொண்டு செயல்பட்டு வருகிறது. இனி ஆட்சியர் படிப்பு படித்தவர்களுக்கு அரசுநிர்வாகத்தில் வேலை பளுஇல்லை. ஆட்சியரும் நீதிசட்டங்களையும் படித்துத்தான் வருகிறார். மாவட்ட நிர்வாக நீதிபதியாச்சே.அவர் நீதிதுறையில் மூக்கை நுழைக்க நீதிமான்கள் விடுவார்களா. அதுதான் ????
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-மார்-202019:35:04 IST Report Abuse
J.Isaac பஸ் ஓடாது. ரயில் ஓடாது. வக்கீல்கள் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது. தமிழகம் முழுவதும் 144 தடை. மாணவர்கள் மட்டும என்ன பாவம் செய்தார்கள். மிக்க மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். தேர்வை மாற்றி வைக்க வேண்டியது தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X