படாய்படுத்தும் கொரானா

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement



latest tamil news



கொரானா மக்களை படாய்படுத்துகிறது.
ஐம்பது பேர் போகக்கூடிய பஸ்சில் அடித்து பிடித்து பஸ் டாப்பில் உட்கார்ந்து என ஐநுாறு பேர் உட்கார்ந்து பயணிக்கின்றனர். எப்படியாவது ஊர் போய்ச் சேரவேண்டும் குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை கண்களில் பாவமாய் வெளிப்படுத்துகிறது.


latest tamil news


மளிகைக் கடையில் பழக்கடையில் காய்கறிக் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது கடையில் இருப்புள்ளவரை மட்டுமே விற்பனை என்பதாக நினைத்துக் கொண்டுள்ளனர்.


latest tamil news


Advertisement

இவர்களை எப்படி கையாள்வது என்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை உட்கார்ந்து உட்கார்ந்து என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை நமக்கு தெரியாவிட்டாலும் பாதிக்கப்பட்ட நாடுகள் எந்த மாதிரி நடவடிக்கைகள் எடுத்து மீண்டன என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.


latest tamil news


குறைந்த பட்சமாக இன்னும் இரண்டு நாள்தான் அதன்பிறகு பஸ்கள் ஒடாது அவரவர் ஊருக்கு போய்ச்சேருங்கள் என்று காலஅவகாசம் கொடுக்க வேண்டும் அது இல்லாததால் அல்லது தெரியாததால் இதுதான் கடைசி பஸ் என்பது போல மக்கள் அடித்துபிடித்து எப்போதும் இல்லாத நெருக்கத்துடன் பயணிக்கின்றனர்.


latest tamil news


மூன்று மீட்டர் துாரம் தள்ளியிரு ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்கவேண்டாம் என்பது போன்ற மருத்துவ அறிவிப்புகள் எல்லாம் எப்படியாவது ஊர் போய்ச் சேரவேண்டும் என்ற பரபரப்பில் அடிபட்டு போகிறது.


latest tamil news


இத்தாலியில் வீட்டை விட்டு வந்தாலே கைதாம் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் விரைவில் இங்கும் நிஜமாகலாம் இப்போதே வடமாநிலங்களில் அடையாள அட்டை காண்பித்து காரணம் சொல்லிவிட்டுதான் பயணிக்க முடிகிறது வெளியே வந்தவர்களை கிருமி நாசினியால் குளிப்பாட்டியே அனுப்புகின்றனர்.


latest tamil news


ஒன்று மட்டும் புரிகிறது இது துவக்கம்தான் என்பதுதான் அது.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-மார்-202004:17:47 IST Report Abuse
J.V. Iyer கோரனோ படுத்தும் பாடு..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-மார்-202003:58:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆள்பவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தான் இப்படி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X