பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், சிலர் வெளியே நடமாடுவதாக வந்த தகவலை அடுத்து தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பு: கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 3000 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளன.

அரசின் உத்தரவை மீறி வெளியில் சென்றால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். 'கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றுவது தெரிந்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-மார்-202009:31:33 IST Report Abuse
அசோக்ராஜ் யோவ் ... அப்புறம் எப்படி ஐயா அந்த வீடுகளில் பெண் எடுப்பாங்க? பிராண்டிங் ஈஸ் பேட் ஸ்ட்ரேட்டஜி.
Rate this:
Cancel
Gobi - Chennai,இந்தியா
24-மார்-202007:29:36 IST Report Abuse
Gobi பொது இடத்தில் எச்சில் துப்பாதேன்னு சொன்னால் கேக்கமாட்டான் சுத்தமா இருன்னு சொன்னா கேக்க மாட்டான் ஆய்தம் வாங்கும் காசில் சுகாதாரத்தை பேணுன்னா 24000 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்குவான் 3000 கோடி செலவில் சிலை வைக்கிறான் . அதன் கடவுள் இந்த மாதிரி அனுப்பி புத்தி சொல்லி கொடுக்கிறான். இனியும் எவனாவது நான்தான் பெரியவன், பெரிய நாடு , பெரிய மதம் ,சாதி அப்படின்னு பேசுனா கடவுள் இப்படித்தான் வாயிலேயே போடுவான்
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
24-மார்-202006:36:13 IST Report Abuse
chander இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் கொரோனாவே மக்களை இப்படி தனிமை படுத்தி உற்பத்தி தேதி முடிவு தேதி என ஸ்டிக்கர் ஓட்ட வைத்து விட்டாயே இது உனக்கே அடுக்குமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X