20 மாநிலங்களில் ஊரடங்கு மீறுவோர் மீது நடவடிக்கை

Updated : மார் 25, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Corona, கொரோனா, ஊரடங்கு, மீறுவோர், நடவடிக்கை

புதுடில்லி:நாட்டில், 'கொரோனா' பரவலை தடுப்பதற்காக, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான ஊரடங்கும், ஆறு மாநிலங்களில், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பித்து, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முழுமையான ஊரடங்கு உத்தரவை, கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு, நாடு முழுவதும், 400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, எட்டு பேர் பலியாகி உள்ளனர். 'வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மக்கள் ஒருவருக்கொருவர் விலகி இருப்பது அவசியம்' எனக் கூறி, நேற்று முன் தினம், 14 மணி நேர மக்கள் ஊரடங்குக்கு, பிரதமர், நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் விடுத்த வேண்டுகோளின் படி, அனைத்து மாநிலங்களிலும், மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆனால், ஒரு சில இடங்களில், மக்கள் கூட்டமாக, பொது இடங்களில் கூடியதையும் காண முடிந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில், இம்மாதம், 31 வரை, முழுமையான ஊரடங்கை தொடருமாறு, மத்திய அரசு, நேற்று முன் தினம் பரிந்துரை செய்தது.இந்நிலையில், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான ஊரடங்கும், ஆறு மாநிலங்களில், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பித்து, அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இது குறித்து, பிரதமர், மோடி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், நேற்று கூறியிருப்பதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று முன் தினம் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கின் போது, சில இடங்களில், அதன் தீவிரத்தை உணராமல், மக்கள் வெளியில் நடமாடியது கவலை அளிக்கிறது.அரசு சொல்லும் பாதுகாப்பு விதிமுறைகளின் அவசியத்தை புரிந்து கொண்டு, அதை மீறாமல் பின்பற்றி, தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள, மக்கள் முன்வர வேண்டும். மத்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகள், ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்பதை, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.'இந்த ஊரடங்கு உத்தரவை, மாநில அரசுகள், கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.


டில்லிஇதையடுத்து, டில்லியில், நேற்று காலை, 6:00 மணி முதல், முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது. டில்லி எல்லைகள் மூடப்பட்டன. 'மளிகை கடைகள், பால், சமையல் எரிவாயு, தொலை தொடர்பு சேவைகள், வீடு தேடி வரும் உணவு சேவைகள், வங்கி, ஏ.டி.எம்., மருத்துவமனை, மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள், வழக்கம் போல் இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆட்டோ, டாக்சி' உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வசதிக்காக, 25 சதவீத பஸ்கள் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தின், 16 மாவட்டங்களில், நேற்று முதல், முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, டில்லி - உ.பி., எல்லைகள் மூடப்பட்டன. இதனால், நேற்று காலை, வாகன போக்குவரத்தில் கடுமையான குழப்பங்கள் ஏற்பட்டன.


பஞ்சாப்பில் 144பஞ்சாப்பில் 21 பேரும், ஹரியானாவில், 12 பேரும், சண்டிகரில் ஆறு பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஏழு மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இங்கும், அத்தியாவசிய பொருட்கள் தவிர, மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.


அருணாச்சல் பிரதேசம்வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில், நேற்று மாலை, 5:00 மணி முதல், முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொது இடத்தில், 10 பேருக்கு மேல் கூட, தடை விதிக்கப்பட்டுள்ளது.'தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, இம்மாதம், 31 வரை, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும்' எனவும், மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


ரூ.1,500 உதவி தொகைதெலுங்கானாவில், 27 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று காலை முதல், வருகிற, 31 வரை, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, காய்கறி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம், அலை மோதியது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, புகார்கள் எழுந்தன.ரேஷன் அட்டை வைத்துள்ள, 87.59 லட்சம் பேருக்கு, 12 கிலோ அரிசியும், ரூ.1,500 உதவி தொகையும் வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.


விதி மீறும் ஆந்திர மக்கள்ஆந்திராவிலும், மார்ச் 31 வரை, மக்கள் ஊரடங்கை நீட்டித்து, மாநில அரசு, நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும், மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆந்திரா முழுவதும் 144 தடை உத்திரவு பிறக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் அதை மதிக்காமல் வெளியில் சுற்றி வருகின்றனர். திருப்பதியில், பாதிக்கும் மேற்பட்ட கடைகள், நேற்று திறந்து வைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோ, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களிலும், மக்கள், கூட்டம் கூட்டமாக பயணம் செய்து வருகின்றனர்.


ம.பி.,யில் 35 மாவட்டங்கள்மத்திய பிரதேசத்தில், ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள, 35 மாவட்டங்களில், பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து, 72 மணி நேரத்தில் இருந்து, வருகிற, 31 வரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ரூ.20 கோடி நிதி


பஞ்சாபில், ஏழை மக்களுக்கு, தங்கும் வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதற்காக, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக, மாநில முதல்வர், அமரீந்தர் சிங் தெரிவித்தார்.


'பாலிவுட்' விமர்சனம்நாடு முழுவதும், நேற்று முன் தினம் நடைபெற்ற மக்கள் ஊரடங்கின் போது, மாலை, 5:00 மணிக்கு, அவரவர் வீட்டு மாடி மற்றும் வாசலில் நின்று, கைகளை தட்டி, மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்குமாறு, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஆனால், பல்வேறு இடங்களிலும், மக்கள் கூட்டம் கூட்டமாக கை தட்டியபடி, சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த செயலை, 'பாலிவுட்' நடிகைகள் சோனம் கபூர், ரிச்சா சட்டா, இயக்குனர்கள் கரன் ஜோஹர் உட்பட பலரும், கடுமையாக விமர்சித்துள்ளனர்.


மின்சார ரயில்கள் நிறுத்தம்


மஹாராஷ்டிராவின் மும்பையில், தினமும் 80 லட்சம் பேர், புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அங்கு, வரும், 31 வரை, புறநகர் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.


தொழில் அமைப்புகள் கோரிக்கை


மக்கள் ஊரடங்கை, நாளை நள்ளிரவு, 12:00 மணி வரை நீட்டித்து, கோவா முதல்வர், பிரமோத் சாவந்த், நேற்று முன் தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 20 சதவீத ஊழியர்களை கொண்டு பணி செய்ய அனுமதி அளிக்குமாறு, பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள், முதல்வரிடம் நேற்று கோரிக்கை வைத்தனர்.


பிரதமர் பாராட்டு


பல்வேறு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, துணிச்சலுடன் சென்று, பத்திரமாக மீட்டு வந்த, 'ஏர் - இந்தியா' ஊழியர்களின் மனிதநேயம் மிக்க பணி, அளப்பரியது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள். ஏர் - இந்தியா ஊழியர்களின் வீட்டருகே வசிப்பவர்கள், பயம் காரணமாக, அவர்களை புறக்கணிப்பதாக கேள்விப்பட்டேன். இது மிகவும் வருத்தமளிக்கிறது.நரேந்திர மோடி, பிரதமர்


கெஜ்ரிவால் வேண்டுகோள்


சுற்று சூழல் மாசின் போது, அரசு கொண்டு வந்த சட்ட திட்டங்களுக்கு, டில்லி மக்கள் பேராதரவு அளித்தனர். 'டெங்கு' காய்ச்சலை எதிர்த்து போராடியதிலும், அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. எனவே, 'இந்த ஊரடங்குக்கு ஆதரவு அளித்து, கொரோனாவுக்கு எதிரான போரை, வெற்றி பெற செய்வீர்கள்' என, நம்பிக்கை இருக்கிறது.அரவிந்த் கெஜ்ரிவால்,டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
24-மார்-202021:01:02 IST Report Abuse
a natanasabapathy முழு ஊரடங்கு என்கிறார்கள் Vanki atm செயல்படும் என்கிறார்கள் வங்கி சேவையும் Atm வீடு தேடி வருமா மருந்து வாங்க வேண்டும் என்றால் என்ன செய்வது
Rate this:
Cancel
Sudhakar. R - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202019:27:49 IST Report Abuse
Sudhakar. R இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியது உலகமே இந்தியர்கள் பற்றி பேசும் நாள் விரைவில்... பி.கு: இன்னும் 15 நாள் கழிச்சு இந்த போஸ்ட் படியுங்க புரியும்.
Rate this:
Cancel
Loganathan Balakrishnan - Salem,இந்தியா
24-மார்-202011:11:13 IST Report Abuse
Loganathan Balakrishnan ஊரடங்கு என்று சொல்கிறார்கள் ஐம்பது % தொழிலார்கள் வேலையும் செயலானும் சொல்கிறார்கள் என்னதான் செய்யறது ஒன்னும் புரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X