போபால்:மத்திய பிரதேச மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி யேற்றார்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பா.ஜ., வில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்தது. முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார்.
சமீபத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டில்லியில் பா.ஜ., தலைவர் நட்டாவை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இன்றிரவு பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கவர்னர் மாளிகையில் இன்று இரவு நடந்த நிகழ்ச்சியில், முதல்வராக பதவியேற்றார்.அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE