சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வருமானம் குறைந்தாலும் தரம் குறையாது!

Updated : மார் 24, 2020 | Added : மார் 23, 2020
Share
Advertisement
வருமானம் குறைந்தாலும் தரம் குறையாது!

கோவையின், பிரபல தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெண்கள் அதிகம் ஈடுபடாத, 'பிசினஸ்' துறையில் ஈடுபட்டு, வெற்றி பெற்று வரும் கோவை, 'அவணீதா டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் உமா சேகர்:
பூர்வீகம், ஈரோடு மாவட்டம், கள்ளியம்புதுார் கிராமம். நடுத்தர குடும்பம் தான். விவசாயியான அப்பா, கொஞ்ச காலத்திற்கு பின், கோவையில், 'டெக்ஸ்டைல் பிசினஸ்' துவக்கினார். அரசு பள்ளியில் தான் படித்தேன். எம்.பி.ஏ., முடித்ததும், திருமணம் ஆனது. கணவரின் சகோதரிகள் இருவருடன் இணைந்து, 2 லட்ச ரூபாய் முதலீட்டில், குழந்தைகளுக்கான ரெடிமேட் உடைகள் ஷோரூமை, ஈரோட்டில் துவக்கினேன். பிறகு, குழந்தைகளுக்கான அனைத்துப் பொருட்களும் விற்கும், 'ஷாப்பை' துவக்கினேன்.

எனக்கு, 'ரிஸ்க்' எடுக்கப் பிடிக்கும். கணவர், ராஜசேகர் பச்சைக்கொடி காட்ட, வங்கிக் கடன் மற்றும் பிற வழிகள் மூலம், 30 கோடி ரூபாய் முதலீட்டில், 2006ல், டெக்ஸ்டைல் நிறுவனத்தை துவக்கினேன். அதை, நானும், தங்கை, கல்பனாவும் கவனித்துக் கொள்கிறோம்.நிறுவனத்தை நடத்துவதில் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன். அப்போது, தனிமையில் அமர்ந்து கலங்கி உள்ளேன். எனினும், 'நிறுவனத்தை மேற்கொண்டு நடத்த முடியாது' என, ஒரு போதும் நினைத்ததில்லை.

இதற்கிடையே, சட்டம் படித்து, தேர்ச்சி பெற்றேன். படிப்படியாக நிறுவனத்தை விரிவுபடுத்தினேன். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தேன். நிறைய அனுபவங்களை கற்றேன். ஆப்ரிக்கா உட்பட, பல நாடுகளில் இருந்து, தரமான பருத்தியை இறக்குமதி செய்கிறோம். இப்போது, என் நிறுவனத்தில், 900 பெண்கள் உட்பட, 1,000 பேர் வேலை பார்க்கின்றனர். ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய், பிசினஸ் செய்கிறோம். பல கிளை நிறுவனங்களையும் நடத்தி வருகிறோம். இத்தனை ஆண்டுகளில், பல அனுபவங்களைக் கற்றுள்ளேன். விற்பனை சூழல் கடினமாக இருந்தாலும் அல்லது வருமானம் குறைந்தாலும், நம் உற்பத்தி பொருளின் தரத்தை, ஒரு போதும் குறைக்கக் கூடாது. வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப, நம் தொழில் மற்றும் கட்டமைப்பு அமைய வேண்டும்.தொழிலில் எந்த முடிவானாலும், உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். அதன் பிறகு தான், அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பலவற்றை, கற்றுக் கொண்டேன்.

பிசினஸ் குடும்பத்தில் பிறந்தாலும், நானும், தங்கையும், சொந்த திறமையால் தான், உழைத்து வெற்றி பெற்றுள்ளோம். குடும்பத்திற்காக கூடுதல் நேரம் செலவழிப்பது தான் சவாலாக உள்ளது. எனினும், குறைந்த நேரத்தையும் தரமாக செலவிடுவதால், குடும்பத்திலும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்கிறோம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X