பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசாருக்கு, 22 கட்டளைகள் : டி.ஜி.பி., திரிபாதி சுற்றறிக்கை

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : கொரோனா வைரஸ் பரவாமல் தற்காத்து கொள்வது குறித்து, போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி, 22 கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.இது குறித்து, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் உள்ளிட்டோருக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* புகார் அளிக்க வருவோர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்திக்க வருவோரை, வெப்பமானி வாயிலாக சோதனை செய்த பிறகே, அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
Corona, கொரோனா, 22 கட்டளைகள் , டி.ஜி.பி., திரிபாதி , சுற்றறிக்கை

சென்னை : கொரோனா வைரஸ் பரவாமல் தற்காத்து கொள்வது குறித்து, போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி, 22 கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் உள்ளிட்டோருக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* புகார் அளிக்க வருவோர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்திக்க வருவோரை, வெப்பமானி வாயிலாக சோதனை செய்த பிறகே, அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு வருவோர், அலுவலக நுழைவு வாயில்கள் மற்றும் முக்கிய இடங்களில், கைகளை கழுவ
வசதி செய்து தர வேண்டும்.
அந்த இடங்களில், தரமான கிருமி நாசினி பொருட்களை, எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே, அமர வைக்க வேண்டும்
* புகார் அளிக்க வருவோர் மற்றும் பார்வையாளர்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களை தனித்தனியாக, குறிப்பிட்ட இடைவெளி துாரத்தில் சந்திக்க
வேண்டும்.
இந்த சந்திப்பு, காற்றோட்டம் உள்ள பகுதிகளில் நடக்க வேண்டும்; 'ஏசி' வசதியுள்ள, மூடிய அறைகளில் நிகழக்கூடாது
* அடிக்கடி பயன்படுத்தும் தொலைபேசி, கீ போர்டு, கதவுகளின் கைப்பிடி போன்ற இடங்கள் மற்றும் பொருட்களை, கிருமி நாசினி வாயிலாக அடிக்கடி துடைக்க வேண்டும்.
பணி செய்யும் இடம், எப்போதும் சுத்தகமாக இருக்க வேண்டும்
* வரும், 31 வரை, கூட்டங்கள் மற்றும் எவ்வித நிகழ்ச்சிகளையும், போலீஸ் அதிகாரிகள் நடத்தக் கூடாது.
கோப்புகளை, 'இ - ஆபிஸ்' அல்லது இ - மெயில் வாயிலாக அனுப்ப வேண்டும்.அதிகாரிகளிடம் நேரில் தருவதை தவிர்க்க வேண்டும்
* பொது இடங்கள் மற்றும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளிப்பது பற்றி, உள்ளாட்சி துறையினருடன், எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
அலுவலக வளாகத்தில், பொதுவாக கூடும் இடங்கள், கழிப்பறை, முகம் கழுவும் இடங்களில், கட்டாயம் கிருமி நாசினி, சோப் உள்ளிட்ட பொருட்களை வைக்க வேண்டும்
* கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது பற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பொது மக்களுக்கு எளிதில் தெரியும்படி, அறிவிப்பு செய்ய வேண்டும்.
இருமல், தும்மல், காய்ச்சல், சளி இருப்போரை, காவல் நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம்
* கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிய, உதவி மைய எண்களான, 104, 044 - 2951 0400/500/ 044 - 2430 0300, 044 - 4627 4446 மற்றும் 1800 1205 55550, 87544 48477 ஆகிய தொலைபேசி எண்களை, காவல் நிலையங்களில், பொது மக்களின் பார்வைக்கு எழுதி வைக்க
வேண்டும்
* தபால்களை, அலுவலக நுழைவு வாயில்களிலேயே பெற வேண்டும். அதற்காக, நிரந்தர அலுவலகத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
போலீசார் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும், தினமும் கழுவி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
* தும்மல் மற்றும் இருமல் வந்தால், கைக்குட்டை மற்றும் காகிதம் பயன்படுத்த வேண்டும். கைகளை பயன்படுத்தினால், பின், கிருமி நாசினி வாயிலாக கழுவ வேண்டும். வெறுமனே தும்முவது, இருமுவது, சளியை கண்ட இடங்களில், துப்புவது கூடாது
* மதிய உணவு இடைவெளியில் கூட்டமாக சாப்பிடக் கூடாது. 'கேன்டீன்' செயல்பட்டால், அங்கு கூட்டம் கூடுதல் கூடாது.
அங்கு பயன்படுத்தும், அனைத்து பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்துவது அவசியம்
* திருமண மண்டபம், சமூக நல கூடம், சிறார் மன்றம், உடற்பயிற்சி கூடம், பொது விளையாட்டு அரங்கத்தை மூட வேண்டும்
* போலீஸ் குடியிருப்புகள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை செயல்படும் இடங்களில், கொரோனா வைரஸ் குறித்து, விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக, எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்
* போலீஸ் மருத்துவமனைகளை, சுகாதாரத் துறையுடன் இணைந்து, டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இன்றி, மருந்து, மாத்திரைகளுடன் தயார் நிலையில் வைக்க
வேண்டும்.
சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை முதல்வர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் பற்றி தகவல் கிடைத்தால், உடனடியாக, அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்
* பணிக்கு வரும் போதும், பணி முடிந்த பின்னும், நன்றாக குளித்துவிட்டு, சுத்தமான உடைகளை அணிய வேண்டும்.இவ்வாறு, 22 கட்டளைகளை, அந்த சுற்றறிக்கையில் டி.ஜி.பி., கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
24-மார்-202006:51:25 IST Report Abuse
SaiBaba லஞ்சத்தோட கொரோனாவையும் சேர்த்துக் கொடுத்தால் போலீஸுக்கு கஷ்டமாச்சே, என்ன பண்ணும் போறீங்க? பொறுத்துப் பொறுத்து பூமித்தாய் பொங்கிட்டாளோ?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-மார்-202003:54:50 IST Report Abuse
blocked user சிறப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X