சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'கிடா' விருந்தை ரத்து செய்த அமைச்சர்!

Added : மார் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'கிடா' விருந்தை ரத்து செய்த அமைச்சர்!

''கிராமங்கள்லயும் மக்கள் நடமாட்டத்தை குறைச்சுட்டாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''கொரோனா விழிப்புணர்வு விஷயமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஆமாம்... மதுரை மாவட்டத்துல, 13 ஒன்றியங்கள்ல, 420 கிராம ஊராட்சிகள் இருக்கு... கொரோனா பரவாம தடுக்க, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், கோவில்களை மூடிட்டாலும், நகரங்களை ஒட்டியிருக்கிற கிராம பகுதிகள்ல, மக்கள் நடமாட்டம் அதிகமா இருந்துச்சுங்க...''இதனால, 420 ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்களுக்கு, கலெக்டர், வினய் ஒரு உத்தரவு போட்டிருக்கார்... அதுல, 'மக்கள் வெளியில வராதபடிக்கு, வீடு, வீடாக போய் விழிப்புணர்வு பண்ணுங்க'ன்னு சொல்லியிருந்தாருங்க... ''ஊராட்சி தலைவர்களும், செயலர்களும் சுறுசுறுப்பா செயல்பட்டு, கிராமப் புறங்கள்லயும், மக்கள் நடமாட்டத்தை குறைச்சுட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''டில்லி மேலிட முடிவை, மாத்த வச்சுட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.''காங்கிரஸ் தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஆமாம்... அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்புல, மூணு செய்தி தொடர்பாளர்களை தேர்வு செய்யறதுக்கு, மாநில வாரியா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம், பேச்சு போட்டி நடத்தியிருக்கா... ''தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஹசன் தலைமையில நடந்த பேச்சு போட்டியில, ஐந்து பேரின் பெயர்களை தேர்வு செய்து, டில்லி மேலிடத்துக்கு அனுப்பி வச்சிருக்கார் ஓய்...''இந்த ஐந்து பேருக்கும், தேசிய அளவுல, டில்லியில மீண்டும் பேச்சு போட்டி நடக்கும்... அதுல வெற்றி பெற்று, முதல் மூணு இடங்களை பிடிக்கறவாளுக்கு தான், செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும்...''பேச்சு போட்டி நடக்கற இடத்துல வைக்கற மேடையின் பின்னணி பேனர்ல, பகத்சிங், காவி நிறத்துல தலைப்பாகை கட்டியிருக்கற மாதிரியான படத்தை, 'லோகோ'வா வைக்கணும்னு மேலிட தலைவர்கள் சொல்லியிருக்கா ஓய்...''ஆனா, 'பகத்சிங் தலைப்பாகையை, நான் காவி நிறத்துல வைக்க மாட்டேன்... மஞ்சள் நிறத்துல தான் வைப்பேன்'னு, ஹசன் வாக்குவாதம் செய்திருக்கார்... அவரது வாதத்தை ஏற்று, பகத்சிங்கின் தலைப்பாகை நிறத்தை, மேலிடமே மஞ்சள் நிறமா மாத்திடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கிடா விருந்தையே ரத்து பண்ணிட்டாரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...''கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு, மதுரையில, போன, 22ம் தேதி, தன் பேரனுக்கு காது குத்து மற்றும் கிடா விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாரு... ''இதுக்காக, சொந்தக்காரங்க மட்டுமில்லாம, கட்சிக்காரங்களுக்கும், 'மெகா சைஸ்ல' அழைப்பிதழ் அடிச்சுகுடுத்திருந்தாரு வே...''கிடா விருந்துக்கும், தடபுடலான ஏற்பாடுகளை பண்ணியிருந்தாரு... ஆனா, 22ம் தேதி மக்கள் ஊரடங்குக்கு பிரதமர், மோடி அழைப்பு விடுத்ததால, கடைசி நேரத்துல, கிடா விருந்தை ரத்து பண்ணிட்டாரு... இதனால, கிடா விருந்து சாப்பிட காத்திருந்த கட்சிக்காரங்க, ஏமாந்து போயிட்டாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனித்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
24-மார்-202016:39:18 IST Report Abuse
karutthu கிடா விருந்துகா பஞ்சம் ......இப்போ இல்லையெனாலும் அப்புறம் நடக்குமே
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
24-மார்-202007:31:33 IST Report Abuse
a natanasabapathy ஒரு தலைப்பாகையின் நிறத்தைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாதவனை எல்லாம் நாட்டை விட்டே துரத்தவேண்டும் மானம் உள்ள இந்துக்கள் பச்சை நிறத்தை பயன்படுத்த கூடாது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-மார்-202006:28:42 IST Report Abuse
D.Ambujavalli ஊரே எரிந்தாலும், என் உயிர் போனாலும் கூட ஓசியில் வரும் கிடா விருந்தை விடமாட்டோம் என்று நா ஊற காத்திருந்தவர்கள் 'கவலைப்பட வேண்டாம் இந்தக் கொரானா கலாட்டா ஓய்ந்ததும் ஒட்டிக்கு ரெட்டியா வெச்சுடுவோம்' என்று அமைச்சரின் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள் எப்படியோ, கொரானா புண்ணியத்தில் ஆடுகளின் மரணத்துக்கு தற்காலிக ஒத்திவைப்பு கிடைத்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X