இந்தியாவில்'கொரோனா'பாதிப்பு 511

Updated : மார் 25, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Corona, கொரோனா, பாதிப்பு, 433 , பலி,  8 , உயர்வு, ரத்து

புதுடில்லி : நாடு முழுவதும் 511 பேர் 'கொரோனா' வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் புதிதாக 98 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளானது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது. இதில் 41 பேர் வெளிநாட்டினர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் வரை ஏழாக இருந் தது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தை சேர்ந்த 57 வயது நபர் வைரஸ் தொற்றுக்கு நேற்று பலியானார். ஹிமாசல பிரதேச மாநிலம் கங்ராவில் 68 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று இறந்தார்.

இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. சோதனை நாடு முழுவதும் 18 ஆயிரத்து 383 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்து உள்ளது.இதில் மஹாராஷ்டிராவில் 67; கேரளாவில் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டில்லி 29; உ.பி.யில் 28; ராஜஸ்தானில் 27; தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இம்மாதம் 31 வரை முழுமையான ஊரடங்குபிறப்பிக்கப்பட்டுள்ளது.பீஹார் ஹரியானா உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஒரு சில மாவட்டங்கில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தடை விதிப்பு



அனைத்து ரயில்கள் மாநிலங்களுக்கு இடையிலான பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களை தவிர மற்றவர்கள் அவசியமின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புற நோயாளிகள் பிரிவு செயல்படாது என அறிவிக்கப்பட்டது

உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மட்டுமே இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் நேற்று பேசியதாவது:கொரோனா குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகத்தினரின் பணி மகத்தானது.அவர்கள் வெளியிடும் செய்திகள் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் போக்கி ஆக்கபூர்வமான சிந்தனையை விதைக்க வேண்டும்.
வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தலை புரிந்து கொண்டு அது குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஊடகங்களுக்கு என் பாராட்டுக்கள்.


டி.வி.எஸ். மோட்டார் மூடல்



டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.


பாலியல் தொழிலாளிகள் பணி புறக்கணிப்பு



மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் சிகப்பு விளக்கு பகுதி உள்ளது. இங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பணிக்கு வரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.


கடும் நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்



நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் டி.ஜி.பி.க்களுடன் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை மிக கடுமையாக நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து டி.ஜி.பி.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.


போராட்டங்கள் நிறுத்தி வைப்பு



மஹாராஷ்டிராவின் மும்பையின் நாக்பாடா என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த ஜனவரி 26 முதல் தொடர் போராட்டம் நடந்து வந்தது. 'மும்பை பாக்' போராட்டம் என அழைக்கப்பட்ட இது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கடந்த 66 நாட்களாக பெண்கள் நடத்தி வந்த தொடர் போராட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது.


அசாம் அரசு நிதி உதவி



கொரோனா பரவலை அடுத்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன் அசாம் மாநிலத்தில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் தங்களை பற்றிய விபரங்களை covhelpline.assam@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் உதவி தொகை அனுப்பி வைக்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.


குற்ற சதி இல்லையா



கொரோனா குறித்த அச்சம் பரவத் துவங்கியதுமே 'வென்டிலேட்டர்' முகக்கவசம் போன்ற மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் கையிருப்பு பற்றி கவலையின்றி மார்ச் 19 தான் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குற்ற சதி இல்லையா. இது போன்ற விளையாட்டுக்களை செய்து பார்க்குமாறு யார் உங்களை
ஊக்குவிக்கின்றனர்.- ராகுல்லோக்சபா எம்.பி. - காங்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-மார்-202003:45:31 IST Report Abuse
blocked user ஹி ஹி ஹி... பாலியல் தொழிலுக்குக்கூட ஒய்வு... நாடு எங்கோ போகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X