சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'உண்மை தான்; யாரும் பாதிப்படையாமல் தடுக்க, கொரோனா கொடூரம் குறைய, இறைவனிடம் வேண்டுவோம்...' என, கூற வைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர், பாலகிருஷ்ணன் அறிக்கை:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பணிகள் முடங்கியுள்ளதால், தினக்கூலி பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'பார்லிமென்டில் தான், அவ்வப்போது, தி.மு.க., - எம்.பி.,க்கள், விளையாட்டு திறனை காண்பிக்கின்றனரே; அதனால், கபடி விளையாட்டை, மத்திய அரசு நன்கு அறிந்திருக்கும்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேச்சு: தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மேம்படுத்த, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்க வேண்டும். கபடி வீரர்களை ஊக்கப்படுத்த, என்ன செய்யப்படுகிறது?
'மாணவர்களுக்கு பாடம் எடுப்பது குறித்து, தெளிவாக ஆலோசனை நடத்த, இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சிசுந்தரம் அறிக்கை: 'கொரோனா வைரஸ்' காரணமாக, ஏப்., 1 வரை, பள்ளிகளுக்கு, தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், மூடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை மட்டும் வரவழைப்பது எந்த விதத்தில் நியாயம்?'

பள்ளிகள் இயங்கும் நேரத்தில் நுாலகங்கள் இயங்கும்; மூடும் நேரத்தில், அதுவும் மூடப்பட்டு விடும். பிறகு, நுாலகங்களுக்கு மாணவர்கள் செல்ல, அநேகமாக வாய்ப்பு கிடைப்பதில்லை...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு: தரமான கல்வியோடு சேர்த்து, நல்ல நுாலகங்களையும் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கம். அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப, நுாலகங்கள் அமைக்கப்படுகின்றன.

'நியாயமான கோரிக்கையாக, தமிழக அரசு கருதுமானால், இதை பரிசீலிக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரெய்மாண்ட் பேட்டி: பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் இடங்களில், கூட்டமாக ஆசிரியர்கள் கூட வாய்ப்பு உள்ளது. இதனால், வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்திவைக்க வேண்டும்.

'தமிழக, மதுபான பிரியர்களுக்கு, அதிர்ச்சி அறிக்கை அளிக்கிறீர்களே...' என, கிண்டலாக சொல்லும் வகையில், 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தினர் அறிக்கை: கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூலம், கடையில் பணியாற்றும், 'டாஸ்மாக்' பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, 31ம் தேதி வரை, கடைகளை அடைக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X