கொரோனாவை கட்டுப்படுத்திய சீனா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (1+ 38)
Share
Advertisement
Corona, WHO, China, death,கொரோனா, சீனா,  உலக சுகாதார அமைப்பு , பாராட்டு

பீஜிங் : 'கொரோனா' வைரஸ், முதன்முதலாக பரவத் தொடங்கிய சீனாவில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை
என்றாலும், வெளிநாட்டில் இருந்து வந்த, 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.


மக்கள் பீதி



இந்த வைரசால், 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை, 15 ஆயிரத்தை நெருங்குவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.கிழக்காசிய நாடான சீனாவில் இருந்து தான், கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கியது. இங்கு, 81 ஆயிரத்து, 93 பேர் பாதிக்கப்பட்டனர்.
அதில், 3,270 பேர், உயிரிழந்தனர். 72 ஆயிரத்து, 703 பேர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். 5,120 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ், சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதிலிருந்து, அந்நாடு வேகமாக மீண்டு வருகிறது.
வைரஸ் பாதிப்பை, முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வைரஸ் முதலில் தோன்றிய வூஹான் நகரில், யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப் பட்டு வருகின்றன.சீனாவில் இருப்பவர்களுக்கு, புதிதாக, இந்த வைரசால் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், வெளிநாடுகளில் இருந்து வந்த, 39 பேருக்கு பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


பரிசோதனை



இதை கட்டுப்படுத்த, சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன விமான போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தலைநகர் பீஜிங்கிற்கு வரும் சர்வதேச விமானங்கள், நாட்டில் உள்ள, 12 இதர விமான நிலையங்களில் தரையிறங்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு வரும் பயணியருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதில், வைரஸ் பாதிப்பு இல்லை என்பது
உறுதிபடுத்தப்பட்ட பிறகு தான், அவர்கள் பீஜிங்கிற்கு அனுப்பிவைக்கப்படுவர்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.


சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு



கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடுமையான நடவடிக்கைகள் வாயிலாக, பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு, கடந்த, நான்கு நாட்களில், ஒருவர் மட்டுமே இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், டபிள்யு.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார அமைப்பு, சீனாவின் முயற்சிகளை பாராட்டியுள்ளது. அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசஸ் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்து, சீனா அடைந்துள்ள வெற்றி, இதர நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.
சீனாவில், வைரஸ் தாக்கம் குறைவதற்கு, ஜி ஜின்பிங் அரசு, பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கடந்த ஜனவரியில், ஹூபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தபோது, அந்நகர் முழுவதும் மூடப்பட்டது. அங்கு வசித்துவந்த, 1.1 கோடி மக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஹூபய் மாகாணத்தில், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சேவையை வழங்க, 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர். வெறும், 10 நாட்களில், 2,300 படுக்கைகளுடன், இரண்டு புதிய மருத்துவமனைகளை கட்டிமுடித்து, உலக நாடுகளை, சீன அரசு திரும்பப் பார்க்க வைத்தது.வைரஸ் பாதிப்பை கண்டறிய, பொது இடங்களில் பரிசோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சீன அரசின் இந்த நடவடிக்கைகளால்,
நாட்டில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வைரசை வீழ்த்த முடியாது!

சமூகத்தில் இருந்து மக்களை பிரித்து, அவர்களை வீட்டில் முடக்கி வைப்பதால் மட்டும், கொரோனா வைரசை நம்மால் வீழ்த்த முடியாது. பொது சுகாதார நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான், வைரஸ் மீண்டும் வீரியம் அடையாமல் இருக்கும்.மைக் ரியான்நிர்வாக இயக்குநர்
உலக சுகாதார அமைப்பு

Advertisement




வாசகர் கருத்து (1+ 38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-மார்-202003:51:09 IST Report Abuse
blocked user முன்னரே ஒவ்வொருவரும் அரசுக்கு ஒத்துழைப்புக்கொடுத்து இருந்தால் எளிதில் பரவாமல் சமாளித்து இருக்கலாம் - ஆனால் ஓடிப்போனவர்கள் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகுக்கே பரப்பினார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X