பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசிக்கு திடீர் மவுசு கடைகளில் அலைமோதும் கூட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

'கொரோனா' காரணமாக, பலரின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதால், ரேஷன் அரிசிக்கு, திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம்தோறும், இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு கார்டில், நான்கு நபர்கள் இருந்தால், 20 கிலோவும்.கள்ளச்சந்தைஅதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் அரிசி வழங்கப்படுகிறது. கார்டுதாரர்கள், மொத்த அரிசி ஒதுக்கீட்டில், பாதி அளவை, இலவச கோதுமையாக வாங்கி கொள்ளலாம்.அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், அரிசி வாங்காமல், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் மட்டும் வாங்குகின்றனர். இதனால், ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத அரிசியை, அவர்கள் சம்மதத்துடன் வாங்கியது போல பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இதற்கு, கடைகளை நடத்தும், கூட்டுறவு துறை அதிகாரிகளும் உடந்தை.தற்போது, கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும், 31ம் தேதி வரை, பள்ளிகள், கல்லுாரிகள், சுற்றுலா மையங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டு உள்ளன.இதனால், அவற்றில் பணிபுரிந்த பலர், வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ரேஷனில் அரிசி வாங்காமல் தவிர்த்த பலரும், அதை வாங்கி வருவதால், எப்போதும் இல்லாத வகையில், தற்போது, ரேஷன் கடைகளில், கூட்டம் அலை மோதுகிறது.தொடர் விடுமுறைஇது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:ஒரு கடையில், 1,000 அரிசி கார்டுகள் இருந்தால், 700 பேர் மட்டும் அரிசி வாங்குவர். இதனால், கிடங்குகளில் இருந்தும், அதே விகிதப்படி அரிசி அனுப்பப்படுகிறது; தற்போது, தொடர் விடுமுறை காரணமாக, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் அரிசி வாங்க வருகின்றனர். இதனால், கடைகளுக்கு, அதிகாரிகள், முழு அளவில் அரிசி அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷனில் வழங்க, தேவையான அளவு அரிசி கையிருப்பு உள்ளது; இதனால், அனைத்து கடைகளுக்கும் முழு அளவில் அரிசி அனுப்பப்படுகிறது' என்றார்.எவ்வளவு அரிசி தேவை?ரேஷனில் வழங்க, மாதம், 3.40 லட்சம் டன் அரிசி தேவை. அதில், 2.93 லட்சம் டன், கிலோ, மூன்று ரூபாய்; 1 லட்சம் டன், கிலோ, 8.30 ரூபாய் என்ற விலையில், இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. மீதி அரிசி, வெளிச்சந்தை விலையில், கிலோ, 25 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.
- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X