ஜெ., வாழ்ந்த வீடு நினைவு இல்லமாகும் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஜெ., வாழ்ந்த வீடு நினைவு இல்லமாகும்'

Added : மார் 23, 2020
Share

சென்னை:''ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, செய்தித்துறை அமைச்சர், ராஜு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:ராமச்சந்திரன் - அ.தி.மு.க.,: எம்.ஜி.ஆர்., பயன்படுத்திய பொருட்கள், அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று, அந்த பொருட்களை பார்த்து திரும்பும்போது, எம்.ஜி.ஆருடன் பேசிவிட்டு வந்த உணர்வு ஏற்படும். ஜெ., வாழ்ந்த வேதா இல்லம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அதனை, விரைவில் நிறைவேற்ற வேண்டும். அங்கு சென்று, அவர் பயன்படுத்திய பொருட்களை பார்க்கும் போது, அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு எங்களுக்கும், மக்களுக்கும், ஏற்படும்.
செய்தித்துறை அமைச்சர் ராஜு: வேதா இல்லம், ஜெ., நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை, 2017 ஆக., 17ல், முதல்வர் அறிவித்தார். நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்து கேட்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தங்கவேலு, டிராபிக் ராமசாமி, புகழேந்தி ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விரைவில், ஜெ., வாழ்ந்த, 10 கிரவுண்ட் நிலம் அரசுடமை ஆக்கப்படும். அங்கு, ஜெ., நினைவு இல்லம் அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X