பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா - உள்ளே வராதே' 3,000 வீடுகளில் எச்சரிக்கை, 'நோட்டீஸ்'

Added : மார் 23, 2020
Share
Advertisement
 'கொரோனா - உள்ளே வராதே'  3,000 வீடுகளில் எச்சரிக்கை, 'நோட்டீஸ்'

சென்னை:''சென்னையில், 3,000 வீடுகள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வீடுகளில், வெளியாட்கள் வருவதை தடுக்கும் வகையில், 'நோட்டீஸ்' ஒட்டப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறினார்.

சென்னையில், 'கொரோனா வைரஸ்' தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, அரசு எச்சரித்துள்ளது.இதனால், தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கிருக்கும் வீடுகளை, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளாக, மாநகராட்சி அறிவித்து உள்ளது.சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், சென்னையில், 3,000 வீடுகளில் தங்கியுள்ளனர். அந்த வீடுகளில் இருப்பவர்கள், தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வெளியாட்கள், இந்த வீட்டிற்குள் செல்வதை தடுக்கும் வகையில், 'கொரோனா தொற்று; உள்ளே வராதே' என்ற எச்சரிக்கை வாசகம் அடங்கிய, 'நோட்டீஸ்' அந்த வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
சமூக நலக்கூடங்களில்3,791 பேர் தங்கவைப்பு
சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் மற்றும் காப்பகங்களில், 3,791 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.சென்னை நகரில், ஏராளமானோர் தெருவோரங்களில் வசித்து வருகின்றனர். சுகாதாரமற்ற வாழ்விடத்தில், அவர்கள் வசிப்பதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மாநகராட்சி காப்பகங்கள் மற்றும் சமூக நலக் கூடங்களில் தங்கும்படி, மாநகராட்சி அழைப்பு விடுத்தது. அதன்படி, மாநகராட்சி சமூக நலக்கூடங்களில், 1,727 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், காப்பகங்களில், 2,064 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி காப்பகங்கள் மற்றும் சமூக நலக் கூடங்களில், 3,791 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலேரியா மாத்திரை மத்திய அரசு பரிந்துரை

'கொரோனா வைரஸ்' பாதித்தவர்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ளபடி, 'ஹைட்ராக்சி குளோரோகுயின்' மாத்திரையை, கூட்டு மருந்து சிகிச்சையில் அளித்து வருகின்றனர்.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் முதலில், கொரோனா வைரஸ் பாதித்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த, 45 வயது நபருக்கு, கூட்டு மருந்து சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சையில், தற்போது, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளபடி, மலேரியாவுக்கான, 'ஹைட்ராக்சி குளோரோகுயின்' மாத்திரை வழங்கப்பட்டது. ஒரே விதமான கூட்டு மருந்து சிகிச்சை, அனைவருக்கும் வழங்கப்படவில்லை. உதாரணமாக, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு, பாராசிட்டமால்; தொண்டை வலிக்கு, அசித்ரோமைசின்; இருமலுக்கு, டெக்ஸ்ரோமெத்தோபான்; சளிக்கு, நெப்ராக்சிங்; அலர்ஜி போன்றவற்றுக்கு, குளோர்பெனிரமைன் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில், அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிக்கு ஏற்ப, மருந்துகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X