அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தனியார் சட்ட கல்லுாரி துவக்க அனுமதி தரப்படும்'

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'தனியார் சட்ட கல்லுாரி துவக்க அனுமதி தரப்படும்'

சென்னை:''அரசு சட்ட கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், தனியார்கள், சட்ட கல்லுாரி துவங்க முன் வந்தால், அரசு பரிசீலித்து அனுமதி வழங்கும்,'' என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு சட்ட கல்லுாரி துவக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.அதற்கு பதில் அளித்த அமைச்சர், சி.வி.சண்முகம், ''தமிழகத்தில், 13 அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. இந்த ஆண்டு, அரசு சட்ட கல்லுாரி துவக்கும் கருத்துரு எதுவும், அரசின் பரிசீலனையில் இல்லை. ''அரசு சட்ட கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், தனியார் சட்ட கல்லுாரி துவங்க முன் வந்தால், அரசு பரிசீலித்து அனுமதி வழங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-மார்-202016:13:00 IST Report Abuse
Vijay D Ratnam கோட்டா இல்லாத கல்விதகுதி அடிப்படியில் மாணவர்களை சேர்க்க தனியார் சட்டக்கல்லூரி துவங்க அனுமதி தரப்படும்னு சொல்லுங்க. கட்டப்பஞ்சாயத்து போன்ற அயோக்யத்தனங்கள் எதுவுமில்லாத எதிர்கால தமிழகத்துக்காகவாவது தரமான வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உருவாகணும்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X