அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு, தனியார் ஊழியர்களுக்கு மாத சம்பளம்: ஸ்டாலின்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு, மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:உலகத்தை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரசால், தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற, தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில், 8,000 கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களில், அத்தியாவசிய தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிதியுதவி
கொரோனா நோய் பரிசோதனை கட்டணமாக, 4,500 ரூபாய் என்பது அதிகமாக இருப்பதால், அதை அரசே ஏற்க வேண்டும். மாவட்டம் தோறும், 'வென்டிலேட்டர்' வசதியுடன் உள்ள படுக்கைகளை, அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்க வேண்டும். தனிமைப்படுத்தும் மையங்களையும், புதிதாக அமைப்பதுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டால், போதிய நிதியுதவி செய்து, ஐ.சி.யு., வசதிகளை அதிகரிக்க வேண்டும்.தேவைப்பட்டால், மாவட்டங்களில் உள்ள, பெரிய தனியார் கட்டடங்களையோ அல்லது கல்லுாரிகளையோ, அரசு முன்கூட்டிய கேட்டு பெற்று, தயார் நிலையில் வைக்கலாம். தனிமைப்படுத்துதல்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும், ஒரு மாத வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியுதவி, ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது தான், தனிமைப்படுத்துதல் முயற்சிக்கு வலுசேர்க்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X