அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சட்டசபை கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை:சட்டசபை ஒத்தி வைக்கப்படாததை கண்டித்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும், நேற்று சட்டசபையை புறக்கணித்தன.'
கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, சட்டசபையை ஒத்தி வைக்கும்படி, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; முதல்வர் ஏற்கவில்லை. எனினும், 21ம் தேதி நடந்த, அலுவல் ஆய்வு கூட்டத்தில், ஏப்., 9 வரை நடக்கவிருந்த, சட்டசபை கூட்டத்தை, வரும், 31ம் தேதி வரை நடத்த, முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க, நேற்று முன்தினம் நாடு முழுவதும், சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில், தடையுத்தரவு பிறப்பிக்க, மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது.அதைத் தொடர்ந்தும், சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படாததை கண்டித்து, தி.மு.க., - காங்கிரஸ் - முஸ்லிம் லீக் உள்ளிட்ட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சட்டசபையை புறக்கணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayaraman - kumbakonam,இந்தியா
24-மார்-202010:34:02 IST Report Abuse
jayaraman எதிர் கட்சி தலைவர் கொரோனா அபாயத்தால் சட்டசபையை தள்ளிவைத்து அனைவரும் அவரவர் தொகுதிக்கு சென்று மக்களுக்கு உதவவேண்டும் என்று சொன்னார். எடப்பாடி பிடிவாதமாக ஸ்டாலின் சொல்வதை கேட்கக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தார்.அணைத்து எதிர் கட்சிகளும் சட்டசபையைபுறக்கணித்தவுடன் இன்றுடன் முடிப்பதாக முடிவுசெய்து சட்டசபையை தள்ளிவைக்கிறார்கள். இது எதிர் கட்சிகளின் மேலே உள்ள பகைமையை காட்டுகிறது. முதல்வர் பாரபட்சமில்லாமல் நடக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X