பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதித்தவர்கள் நடமாடிய 10 வீதிகளுக்கு, 'சீல்' : ஈரோடில் உச்சகட்ட உஷார்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Corona, கொரோனா, பாதித்தவர்கள்,சீல், தாய்லாந்து, நாட்டினர் , தொழுகை

ஈரோடு : ஈரோடில், 'கொரோனா' தொற்று கண்டறியப்பட்ட, தாய்லாந்து நாட்டினர் தொழுகை நடத்திய, அவர்கள் நடமாடியதாக கண்டறியப்பட்டுள்ள, ௧௦ வீதிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நேற்று, 'சீல்' வைத்தது. இப்பகுதிகளில் உள்ள கடைகள், ௩௦௦ நிறுவனங்களை திறக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடில், கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், தற்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஈரோடு, கொங்கலம்மன் கோவில் அருகில் உள்ள மசூதியில், தொழுகை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர், இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் நேற்று காலை, அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளை அடைக்க உத்தரவிட்டனர்.
அப்பகுதியை ஒட்டிஇருந்த, 10 வீதிகளுக்கும், 'சீல்' வைத்தனர். 'இந்த வீதிகளில் வசிக்கும் மக்கள், வீடுகளில் இருந்து வெளியில் வரக்கூடாது. வெளியிலிருந்து யாரும் உள்ளே போகக் கூடாது' என, 'ஸ்பீக்கர்' மூலம் அறிவிக்கப்பட்டது.
இப்பகுதிகளில், ௩௦௦க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கலெக்டர் கதிரவன் கூறியதாவது:கட்டுப்பாட்டில் உள்ள, 10 வீதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, நடமாடும், ஏ.டி.எம்., ஏற்பாடு செய்யப்படும். அவர்களது வீடுகளுக்கு மட்டுமின்றி, வசிக்கும் மக்களின் கைகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்களுக்கு, 28 நாட்களுக்குப் பின், உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, வழக்கமான நடைமுறைக்கு மாறுவர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த இருவர், கொரோனா தொற்று கண்டறியப்படாத, 13 பேர் சிகிச்சையில்
உள்ளனர். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்கும் வகையில், இம்மருத்துவமனையை, 'கொரோனா சிகிச்சை மருத்துவமனை'யாக மாற்ற, சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, 300 படுக்கை வசதிகளுடன், இரண்டு நாளில் மாற்றப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.


தனி வார்டில் 11 உலமாக்கள்தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவைச் சேர்ந்த உலமாக்கள், 11 பேர், மார்ச் முதல் வாரம் தமிழகம் வந்தனர். இவர்கள், சேலம், கிச்சிபாளையம் ஜெய் நகரில் உள்ள மசூதி ஒன்றில், 12ம் தேதி முதல் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.முன்னதாக, இந்தோனேஷியாவில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த அவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின் அவர்கள், சேலத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, 'கொரோனா' பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், உலமாக்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்த, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.சேலம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனி வார்டில், 11 உலமாக்கள் உட்பட, 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்தம், சளி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மார்-202017:00:24 IST Report Abuse
J.V. Iyer ஒரு சில நாடுகளில் பற்றாக்குறையால் கொரோன தொற்றியவர்களை மருத்துவமனைகள் திருப்பி அனுப்புகின்றன. இந்த நிலை இந்தியாவில் வராமல் இருக்கவேண்டுமானால், மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் நிலை இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியும். அப்போது கத்தி பிரயோஜனம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-மார்-202015:41:50 IST Report Abuse
Rafi நபி அவர்கள் காலத்தில் தொடர் நோய் பரவிய போது அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு போக வேண்டாம் என்றும், வெளியிலிருந்தும் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் கொண்டார்கள். இது அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவாகியுள்ளது.
Rate this:
Share this comment
வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா
25-மார்-202012:41:27 IST Report Abuse
வாரணம் ஆயிரம்,வந்தவர்கள் எந்தவொரு உண்மையையும் சொல்லாமல் சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு தராமல் ரவுடியிசம் செய்துவருகிறார்கள் . இப்படி நாட்டை கெடுக்கவந்த கூட்டத்திற்கு அரசு சிகிச்சை அளிக்காமல் தேச பற்றுள்ள இந்தியர்களுக்கு மட்டும் சிகிச்சையளித்து காப்பாற்றலாம் அல்லவா ?...
Rate this:
Share this comment
Chola - bangalore,இந்தியா
25-மார்-202013:07:09 IST Report Abuse
Cholaஅந்த நூலை படிக்கவில்லையோ??...
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202001:03:52 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) வெடிகுண்டு மட்டும் அல்ல இப்பொழுது கொரானாவை பரப்புவதிலும் இவர்கள்தான் முன்னணியில் உள்ளனர்...எதோ சதி திட்டத்துடன் தான் இவர்கள் இருக்கின்றார்களா??? கடவுளே எங்களை காப்பாற்று..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X