அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டம் இன்று நிறைவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:சட்டசபை கூட்டத்தொடரை, எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று காலை, 10:15 மணிக்கு, சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம், சபாநாயகர், தனபால் தலைமையில் நடந்தது.
பின், சட்டசபையில், சபாநாயகர் கூறியதாவது:அலுவல் ஆய்வு கூட்டம் குறித்து, குழு உறுப்பினர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று முதல், 31ம் தேதி வரை நடக்கவிருந்த, அனைத்து மானிய கோரிக்கைகளும், இன்றே விவாதிக்கப்பட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்படும். அரசினர் சட்ட முன்வடிவுகளும், ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து, அனைத்து துறை மானிய கோரிக்கைகளையும், இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தீர்மானத்தை, சபை முன்னவரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்; எதிர்ப்பின்றி நிறைவேறியது.இதையடுத்து, சட்டசபை கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று, முதல்வர், துணை முதல்வர் வசம் உள்ள துறைகள் மற்றும், 14 அமைச்சர்கள் வசம் உள்ள, 22 துறைகளின் மானிய கோரிக்கைகள், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X