பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர், நடிகையருக்கு 'பெப்சி' தலைவர் கோரிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை;'பெப்சி' எனப்படும், திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர், ஆர்.கே. செல்வமணி அறிக்கை:கொரோனா வைரஸ் பாதிப்பால், சினிமா உலகம் முடங்கியுள்ளது. இதற்கு முன் நடந்த போராட்டங்களை விட, தற்போது நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது. இச்சங்கத்தில் உள்ள, 25 ஆயிரம் பேரில், 10 ஆயிரம் பேர், தினசரி வேலைக்கு சென்று, சம்பளம் பெறுபவர்கள். சங்கத்தை சேர்ந்த, 'லைட்மேன்' ஒருவர், தொலைபேசியில், என்னை அழைத்து, 'நான் வேலைக்கு போய் இறந்தால் கூட பரவாயில்லை. சாப்பாடு இல்லாமல், என் குழந்தைகள் பசியால் இறப்பதை விட, கொரோனா வைரசால் சாகிறேன்' என்றார்.அவர் சொன்ன வார்த்தைகளை கேட்ட என்னால், வேதனையை தாங்க முடியவில்லை.

இன்று, சினிமாவில் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, ஒரு பணிவான வேண்டுகோள்:சங்க உறுப்பினர்களில் வேலையில்லாமல், 15 ஆயிரம் பேர், ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுபவர்களாக உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு, ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள், கஞ்சி சோறாவது சாப்பிட்டு, உயிர் வாழ முடியும். 10 ஆயிரம் குடும்பத்திற்கு, அரிசிக்கு மட்டும், 2 கோடி ரூபாய் செலவாகும். கருணை உள்ளம் படைத்தவர்கள், உங்களோடு வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு உணவு தர வேண்டுகிறேன். வாழ்வு அளிப்பீர்; நிதி அளிப்பீர்.இவ்வாறு, அவர் கூறிஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X