கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்த வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, குற்றச்சாட்டு பதிவிற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று மீண்டும் ஆஜரானார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி. இவர், 2011 - 2015 வரை, அ.தி.மு.க., அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். வேலை வாங்கி தருவதாக கூறி, 2015ல், 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி, உட்பட நான்கு பேர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின்படி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஏ.ரமேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது, குற்றச்சாட்டு பதிவிற்காக, செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜாரனார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து, 'இருவரும், அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால், கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்' என, உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை, ஏப்ரல், 9க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X