அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.6,409 கோடிக்கு துணை மதிப்பீடு தாக்கல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:நடப்பாண்டில், 6,409 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான, இறுதி துணை மதிப்பீட்டை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:இறுதி துணை மதிப்பீடு, 6,409 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வழி செய்கிறது. இதில், ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் கீழ், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்ள, உபகரணங்கள் நிறுவ, 231.07 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, 160.56 கோடி; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள் வழங்க, கூடுதலாக, 123.39 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடலோர பேரிடர் ஆபத்து குறைப்பு திட்டத்தில், சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவ, 114 கோடி; வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ள, சேதமடைந்த அரசு கட்டடங்களை பழுதுபார்த்து சீரமைக்க, கூடுதலாக, 193.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.'கொரோனா வைரஸ்' தாக்குதலை கட்டுப்படுத்த, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 60 கோடி ரூபாய்; தேசிய ஆயுஷ் குழுமம், தேசிய ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்கங்கள் போன்ற, மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்கான, மாநில அரசின் பங்கு தொகையுடன் சேர்த்து, கூடுதலாக, 579.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளுக்கு, மருந்துகள் கொள்முதல் செய்ய, 167 கோடி; ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க, 252.46 கோடி; அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் செலவினங்களை எதிர்கொள்ள, 188.41 கோடி.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தை செயல்படுத்த, கூடுதலாக, 198.37 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X