கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உரிமம் இல்லாத குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:உரிமம் இல்லாத, குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், தற்காலிகமாக இயங்க அனுமதி அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, புழல் பகுதியை சேர்ந்த, சிவமுத்து தாக்கல் செய்த மனுவில், 'அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக, நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனங்கள், நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' அனுமதியின்றி இயங்கும், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை, முழுமையாக மூட உத்தரவிட்டது. இதையடுத்து, 900க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, 'கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, குடிநீர் உற்பத்தி செய்யும், சுத்திகரிப்பு நிறுவனங்கள், தற்காலிகமாக இயங்க, அரசு அனுமதி வழங்க உள்ளது. உற்பத்தி செய்யும் தண்ணீரில், 15 சதவீதத்தை, அரசுக்கு இலவசமாக வழங்கும்படி நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது' என, நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், ஜூலை, 31வரை தற்காலிகமாக இயங்க, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க, மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை கண்காணித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கின் விசாரணையை, ஏப்., ௨௮க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X