பொது செய்தி

தமிழ்நாடு

தங்க நகை கடைகள் மூடல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நகை கடைகளும், 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், சிறியது, நடுத்தரம், பெரியது என, மொத்தம், 35 ஆயிரம் தங்க நகை கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினமும் சராசரியாக, 2,500 கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், தங்கம் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. அத்துடன், தங்கம் விற்பனையும் பாதித்துள்ளது.இந்நிலையில், தமிழக அரசின், கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அனைத்து நகை கடைகளும், வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதாக, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X