கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவசர வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டில் ஒன்பது நீதிபதிகள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை;கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று முதல் அவசர வழக்குகளை, ஒன்பது நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.
கொரோனா பரவாமல் தடுக்க, உயர் நீதிமன்றத்தில், ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிர்வாக குழுவில் உள்ள, ஏழு நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி, நேற்று ஆலோசனை நடத்தினார். தலைமை நீதிபதி பிறப்பித்த நிர்வாக உத்தரவு தொடர்பாக, பதிவாளர் ஜெனரல், குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பு:அவசர வழக்குகளை, இரு நீதிபதிகள் அடங்கிய, இரு அமர்வுகளும், ஐந்து நீதிபதிகளும், இன்று முதல் விசாரிக்க உள்ளனர். வழக்கறிஞர்கள், தங்கள் அறைகளில் இருந்து இயங்க வேண்டாம். நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒழிய, மனுதாரர்களை, நீதிமன்றத்துக்குள் வரவழைக்க வேண்டாம்.மிக அவசரமான வழக்குகளை மட்டுமே, வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
குறைபாடு உடைய மனுக்களை, பதிவுத் துறை உடனடியாக திருப்பி அனுப்பாது.இடைக்கால உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமர்வுகளை, வழக்கறிஞர்கள் அணுகலாம். மூன்று வாரங்களுக்கு, இந்த நடைமுறை இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அவசர வழக்கு என முடிவெடுத்தால் ஒழிய, மற்ற வழக்குகளை, மூன்று வாரங்கள் தள்ளி வைக்கலாம்; நீதிமன்றங்களில், நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழமை நீதிமன்றங்களுக்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை, உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X