கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தாமதமாக துவங்க உத்தரவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, அத்தியாவசிய பொருட்களான, முக கவசம் மற்றும் கிருமி நாசினி கிடைப்பதை உறுதி செய்யும்படி, வழக்கறிஞர், ஜி.ராஜேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன்பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன், ''10ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை, ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு விட்டது. பிளஸ் 1 தேர்வு, ௨௬ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு, இன்றும் நடக்க உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இன்றும், 26 ம் தேதியும் நடக்க உள்ள தேர்வுகளை, காலை, 10;30 க்கு துவங்கி மதியம், 1:30 மணிக்கு முடிக்க வேண்டும். தேர்வு மையங்களை அடைவதற்கு, பிரச்னையை சந்திக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், தலைமை ஆசிரியர்கள் ஆலோசித்து, குறித்த நேரத்துக்கு மாணவர்கள் வந்து சேர, போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை தவிர்த்து, இந்த கட்டத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது, மாணவர்களின் நலன்களை பாதிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நேரம் மாற்றம்
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை தாமதமாக துவங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், பிளஸ்1, பிளஸ் 2 தேர்வுகள் காலை, 10:30 மணிக்கு துவங்கி, 1:45 மணிக்கு முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X