பொது செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு செல்ல அலைமோதிய மக்கள் கூட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை;இன்று மாலை முதல், 144 தடையுத்தரவு அமலுக்கு வருவதால், சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு செல்வோர் கூட்டம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று அலைமோதியது.
கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவை, இன்று மாலை முதல், வரும், 31ம் தேதி வரை அமல்படுத்த, தமிழக அரசு அறிவித்தது.
பஸ்கள் இயங்கும்
அதனால், சென்னையில் தங்கியிருந்தோர், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர்.ஏற்கனவே, ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆம்னி பஸ்களும், 31ம் தேதி வரை நிறுத்தப்பட்ட நிலையில், சென்னையில் குறைந்த அளவே, அரசு பஸ்கள் இருந்ததால், கோயம்பேடில் கூட்டம் முண்டியடித்தது. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின், 100 பஸ்களை, திருச்சி வரை இயக்க, அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், தனியார் ஆம்னி பஸ்களை இயக்கவும் அனுமதி அளித்தது. இதை சாதகமாக பயன்படுத்திய, ஆம்னி பஸ் நிர்வாகிகள், வழக்கம் போல, கட்டணத்தை மும்மடங்கு அதிகரித்தனர். இதனால், பயணியர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:இன்று மாலை முதல், 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ளதால், சென்னையில் உள்ளோர், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, கூடுதல் பஸ்களை இயக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது; இன்று மாலை வரை, பஸ்கள் இயங்கும். இதனால், பொது மக்கள், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மொத்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். ஆம்னி பஸ்களை, அவற்றின் உரிமையாளர்கள், 31ம் தேதி வரை இயக்க மாட்டோம் என, அறிவித்திருந்த நிலையில், அவர்களை அழைத்து, தமிழகத்துக்குள் பஸ்களை இயக்கும்படி, வலியுறுத்தி உள்ளோம்.
நடவடிக்கை
சென்னை மாநகர பஸ்களை, விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்பதால், வரும் நாட்களில், மாவட்டத்துக்குள்ளும் பஸ் சேவை இருக்காது. சூழலுக்கு ஏற்பவும், அரசு அறிவுறுத்தலுக்கு ஏற்பவும், முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X