பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு - 144 தடை வேறுபாடு என்ன?

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவுக்கும் இடையேயான வேறுபாடுகள்:ஊரடங்கு *சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், அசாதாரண சூழ்நிலையை சீராக்கவும் இச்சட்டம் பிறப்பிக்கப்படும்.*ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் வெளியே வரக்கூடாது  அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கலாம்*உத்தரவை மீறும் பட்சத்தில், ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்  சுய ஊரடங்கு என்பது மக்கள் தாங்களாகவே முன்வந்து, இந்த உத்தரவை கடைபிடிப்பதாகும். இதையே மார்ச், 22ல் கடைபிடித்தனர்.
144 தடை
*குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 144ன் படி எதிர்பார்க்கிற அபாயம் போன்ற சூழ்நிலைகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.*தற்போது கொரோனா அச்சம் காரணமாக, தமிழகம் முழுவதும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது*இதன்படி மக்களிடம் இருந்து வைரஸ் பரவுதலை தடுக்க, ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக்கூடாது.*அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே இயங்கலாம்.*தடை உத்தரவை மீறும்பட்சத்தில், ஆறு மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X