அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மார் 23, 2020
Share
எது அவசியம்'கொரோனா' வைரசில் இருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்நிலையில் நகரங்களை முடக்குவது மூலம் மட்டும், 'கொரோனா' பரவாமல் தடுக்க முடியாது. பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படாது. தற்போதைய தேவை என்பது, பாதிக்கப்பட்டவர்களை முதலில் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பின்

எது அவசியம்
'கொரோனா' வைரசில் இருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்நிலையில் நகரங்களை முடக்குவது மூலம் மட்டும், 'கொரோனா' பரவாமல் தடுக்க முடியாது. பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படாது. தற்போதைய தேவை என்பது, பாதிக்கப்பட்டவர்களை முதலில் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பின் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.


தகவல் சுரங்கம்

இரண்டாவது பெரியது
உலகளவில் இரண்டாவது பழமையான நன்னீர்
ஏரி மற்றும் நீர்ப்பிடிப்பு அளவில் இரண்டாவது பெரிய ஏரி என அழைக்கப்படுவது தங்கன்யிகா ஏரி. இது தான்ஜானியா, காங்கோ, புருண்டி மற்றும் ஜாம்பியா ஆகிய நான்கு நாடுகளில் பரவி உள்ளது. இதன்
நீர்பிடிப்பு பரப்பளவு 2.31 லட்சம் சதுர கி.மீ. இதன் அதிகபட்ச நீளம் 673 கி.மீ. அதிகபட்ச அகலம் 72 கி.மீ. சராசரி ஆழம் 1,870 அடி. அதிகபட்ச ஆழம் 4,820 அடி. இது கடல்மட்டத்தில் இருந்து 2,536 அடி
உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் நல்ல தண்ணீரில் 16 சதவீதம் இந்த ஏரியில் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X