பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, திருப்பூரிலும் பரவியது கொரோனா

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
coronavirus,covid19,coronaupdate,corona,Madurai,Tirupur,கொரோனா,மதுரை, திருப்பூர்

சென்னை: தமிழகத்தில் மதுரை, திருப்பூர் மற்றும் சென்னையில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 467 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் பலியாகி உள்ளனர். 34 பேர் குணமாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 23) மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: தமிழகத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சென்னை - புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது நபருக்கும், திருப்பூரை சேர்ந்த 48 வயது நபருக்கும், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news




மதுரை நபருக்கு சமூக பரவலா?


இதில் சென்னை, திருப்பூரை சேர்ந்தவர்கள் லண்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள். மதுரையை சேர்ந்த நபருக்கு, வெளிநாடு, வெளிமாநிலத்துக்கு செல்லாமல், உள்ளூரிலேயே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-மார்-202010:38:52 IST Report Abuse
R. Vidya Sagar அதான் நேத்து லோடு லோடா சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்திருக்கிறோமே, இனிமேல் பட்டி தொட்டியெல்லாம் கரோனாதான்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
24-மார்-202010:11:20 IST Report Abuse
R.Kumaresan ஒருகாலத்தில் புத்தூர் கட்டென்றால் famous. தற்போது செலுவு அதிகமாக இருக்கிறதென்று மெத்தனமாக இருந்தாலும் கேவலம்.. கிராமங்கள் அதிக நகர மயமாக்கலும் கேவலமாக தெரிகிறது.. நோய் கிருமிகள் வைரஸ் தமிழ்நாட்டில் எங்கிருந்து வந்ததென்று யாருக்குமே தெரியாது.. R.Kumaresan.
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
24-மார்-202009:48:07 IST Report Abuse
sathiya narayanan நாம் முக்கியமான இடத்தில் இருக்கிறோம். மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X