பொது செய்தி

தமிழ்நாடு

மேலும், 3 பேருக்கு, 'கொரோனா' பாதிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:தமிழகத்தில், மேலும் மூன்று பேருக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 12 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து, 12,519 பேர், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், 9 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த, 54 வயது நபர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து, மதுரை, ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. மேலும், சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த, 25 வயது வாலிபர், லண்டன் சென்று திரும்பினார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில், அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது.
அதே போல், லண்டனில் இருந்து வந்த, திருப்பூரைச் சேர்ந்த, 45 வயது நபருக்கும், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 12 ஆக உயர்ந்துள்ளது. இதில், கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள, மதுரையை சேர்ந்த நபர் தான், வெ ளிநாட்டிலிருந்து வராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X