பொது செய்தி

தமிழ்நாடு

'தாக சாந்தி' தரும் சோழபுரம்; 'குடிநீர் ஊரணி' கட்டுப்பாடுகளை பாதுகாக்கும் மக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே குடிநீர் ஊரணியை காப்பதில் சோழபுரம் மக்கள் ஆண்டாண்டு காலமாக கட்டுக்கோப்புடன் இருந்து வருகின்றனர்.

சோழபுரம் கிராமத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வட கரை காளியம்மன் கோயில் புகழ் பெற்றது. இதன் வளாகத்தில் உள்ள சோழபுரம் ஊரணி தண்ணீர் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஊரணியை காக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மக்கள் ஆண்டாண்டு காலமாக பின்பற்றி ஊரணியை காத்து வருகின்றனர்.

சோழபுரம் விவசாயி பாபுராஜ் கூறியதாவது: மழை நீர் ஊரணியின் நீராதாரமாக உள்ளது. இதை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். சுவையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். சிறிதளவு பருகினாலே தாக சாந்தி கிடைக்கும். மாதவிடாய், கர்ப்பிணி, புதுமண தம்பதி ஆகியோர் ஊரணிக்குள் வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் மீறியது கிடையாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X