பொது செய்தி

தமிழ்நாடு

விதி மீறும் அரிசி ஆலைகளால் மக்களுக்கு பாதிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள புதுவயல் அரிசிஆலைகளிலிருந்து வெளியேறும் சாம்பலால் சுற்றுப்புறம் மாசுஅடைவதோடு,சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுவயலில்,50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. தினமும் 25 டன் வரைநெல் அவிக்கப்பட்டு அரைக்கப்படுகிறது. நெல் அவிப்பதற்கு உமிஅவசியம். இந்த உமியை எரிக்கும்போது சாம்பலைதினமும் வெளியேற்ற வேண்டும். இவ்வாறு வெளியேறும் சாம்பல்சுற்றுப்புறத்தை சீர்குலைக்காமல் இருக்க, 'டஸ்ட் பில்டர்' அமைக்கவேண்டும். பாய்லர் பாகங்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.

சாம்பலை உடனடியாக அகற்ற வேண்டும். இதுபோன்ற பலவிதிமுறைகளை ஆலைகளுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம்அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளை பல ஆலைகள்பின்பற்றுவது இல்லை. முறையான பராமரிப்பில்லாமல் வெளியேறும்சாம்பலால், புதுவயல் தேவர்நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் சாம்பல்பரவி மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் ராமர் கூறுகையில்;ஆலைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தையும், மக்களையும் பாதிக்காதவகையில் ஆலைகள் செயல்பட வேண்டும். பில்டர் மற்றும் தடுப்புகள்அமைக்காததால், சாம்பல் வெளியேறி வீடுகளுக்குள் நிறைகிறது.இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் தெரிவித்தும்நடவடிக்கை இல்லை, என்றார்.

வீரப்பன் கூறுகையில்;வீட்டில் பிடித்து வைக்கும் குடிநீர், உணவு பொருட்கள்,ஆடைகள் என அனைத்தும் சாம்பல் படிந்து விடுகிறது.சுவாசக்கோளாறு, கண்சம்மந்தமான நோய்கள், அலர்ஜி ஏற்படுகிறது.குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X