பொது செய்தி

இந்தியா

'கொரோனா' பரவலை தடுக்க சிறை கைதிகளுக்கு, 'பரோல்'

Added : மார் 23, 2020
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா' பரவுவதை தடுக்கும் வகையில், சிறை கைதிகளுக்கு 'பரோல்' வழங்க, டில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சிறை விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது.டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சிறை கைதிகளுக்கு, 'பரோல்' வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சிறை

புதுடில்லி:'கொரோனா' பரவுவதை தடுக்கும் வகையில், சிறை கைதிகளுக்கு 'பரோல்' வழங்க, டில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சிறை விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சிறை கைதிகளுக்கு, 'பரோல்' வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சிறை விதிகளில் திருத்தம் செய்யவும் தீர்மானித்துள்ளது.
நடவடிக்கை
இதுதொடர்பாக, டில்லி அரசின் கூடுதல் வழக்கறிஞர், அனுஜ் அகர்வால், நேற்று, உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில், மனு தாக்கல் செய்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவுவதை தடுக்க, சிறைக் கைதிகளுக்கு பரோல் அல்லது அதிகாரிகள் பரிந்துரையில் சொந்த ஊரில் தங்கி இருக்க அனுமதி வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, இரண்டு புதிய விதிகளுடன், சிறை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பாக ஒரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இதனை ஏற்ற நீதிபதிகள், 'கொரோனா வைரஸ் பரவுவதால், இதே பிரச்சினையை, உச்ச நீதிமன்றமும், தானாக கருத்தில் எடுத்துள்ளது. 'எனவே, அரசு தரப்பில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என, உத்தரவிட்டனர்.
மனு தாக்கல்
இதற்கிடையே, மது அருந்தியுள்ளதை கண்டுபிடிக்கும், 'பிரீத் அனலைசர்' சோதனைக்கு தடை விதிக்கக்கோரி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையினர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில், பிரீத் அனலைசர் சோதனைக்கு வரும், ௨௭ம் தேதி வரை, தடை விதித்த நீதிபதி, பிரதிபா எம்.சிங், சோதனைக்கான மாற்று வழிகளை, சிறப்பு கூட்டம் நடத்தி ஆராயும்படி, மருத்துவ சேவைகள் துறை டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, 'கொரோனாவில் இருந்து, சிறைக் கைதிகளை காப்பாற்றும் வகையில், நான்கு முதல், ஆறு வாரம் பரோலில் விடுவிக்க, தகுதியான சிறை கைதிகளை கண்டறிய, உயர்மட்ட குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும்' என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.'குற்ற வழக்குகளில், ஏழு ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற கைதிகளுக்கு, பரோல் வழங்கலாம்' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X