கொரோனா தடுப்பு நடவடிக்கை மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுடில்லி:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாகவும், அரசை விமர்சிப்பவர்கள் கூட, இந்த விஷயத்தில் பாராட்டு தெரிவிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'கொரோனா தடுப்பு நடவடிக்கைளை தீவிரப் படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான தனிமைப் படுத்தப்படும் முகாம்களை அதிகரிக்கும்படியும் உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் சூர்யகாந்த், என்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
தடை
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. அரசை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, இந்த விஷயத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை களுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்; இது, அரசியல் அல்ல; உண்மை. இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். இதற்கிடையே, இன்று மாலை முதல், வழக்கறிஞர்கள் தங்கும் அறையை மூட, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்கள் கூடி நிற்பதற்கும், அவர்கள் நீதிமன்றத்துக்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் அவசியமான வழக்குகளுக்காக ஆஜராக விரும்பும் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவேயின் அனுமதி பெற்ற பின்பு தான் வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆலோசனை
முக்கியமான வழக்குகளை, 'வீடியா கான்பரன்ஸ்' மூலமாக விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மிகவும் அவசியமான வழக்குகளை விசாரிக்க, ஒரு அமர்வு மட்டும் செயல்பட உள்ளதாகவும், மற்ற வழக்குகளை விசாரிப்பதை நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X