தமிழ்நாடு

சிவகங்கையில் 337 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகங்கை : பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து சிவகங்கைக்கு வந்த 337 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணிக்கிறது. இவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, அழியாத மை கொண்டு கையில் 'சீல்' வைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிவகங்கை மாவட்டத்தில் சானிடைசர், முக கவசத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிவகங்கை அரசு
சிவகங்கையில் 337 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

சிவகங்கை : பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து சிவகங்கைக்கு வந்த 337 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணிக்கிறது. இவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, அழியாத மை கொண்டு கையில் 'சீல்' வைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிவகங்கை மாவட்டத்தில் சானிடைசர், முக கவசத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவில் 14 வார்டுகள் மட்டுமே உள்ளது. இதை 100 வார்டுள்ள தனி சிறப்பு வார்டாக ஏற்படுத்த உள்ளனர்.


337 பேர் கண்காணிப்பு


மார்ச் 1 முதல் தற்போது வரை துபாய், சிங்கப்பூர், மலேசியா, பக்ரைன் போன்ற நாடுகள், பெங்களூரூ போன்ற பகுதிகளில் இருந்து 337 பேர் சிவகங்கை மாவட்டத்திற்குள் வந்துள்ளனர். அவர்களை வீட்டில் தனிமையாக வைத்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வலியுறுத்தி அவர்கள் கையில் அழியாத மையால் 'சீல்' வைக்கவும், வீட்டின் வெளியே விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுவதென சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.


சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய சுற்றுலா தலங்களை பார்வையிட ஆஸ்திரேலியா, ஸ்பெயின், லண்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காரைக்குடி, கானாடுகாத்தானில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை உடனுக்குடன் போலீசார் மூலம் வெளியேற்றினர். தற்போது அங்குள்ள 10க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் ஒரு வெளிநாட்டினர் கூட இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.


தனிமையில் பாதுகாப்பு படை போலீஸ்


சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார் ஒருவர், நண்பரை சந்தித்துவிட்டு வெளிநாட்டில் இருந்து பயிற்சிக்காக இங்கு வந்துள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறிகுறி இல்லாததை உறுதி செய்தனர். இருப்பினும், அவர் உட்பட அவரை சேர்ந்த 13 பாதுகாப்பு படை போலீசாரை பயிற்சி மையத்திலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.


தொற்றா நோயாளிகளுக்கு மாத்திரை


சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய கோளாறு, புற்றுநோய் போன்ற தொற்றா நோயாளிகள் தடையின்றி மாத்திரை எடுக்க ஏதுவாக, நேரடியாக மருத்துவமனைக்கு வராமல், நோயாளிகளின் உறவினரிடம் மருந்து சீட்டு நோட்டை வழங்கினால், தொடர்ந்து 2 மாதத்திற்கு மாத்திரைகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் வழங்கப்படும்.


சென்னை பஸ்கள் செல்லாது


கலெக்டர் ஜெயகாந்தன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி கூறியதாவது, வீட்டில் தனிமையில் உள்ள 337 பேரும் 28 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர். ரத்தம், சளி சோதனைக்கு பின் அறிகுறி தென்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர். இல்லாவிடில் தனிமைப்படுத்த தேவை இருக்காது. பொது மக்களும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் குறித்து, 1077 என்ற எண்ணுக்கு தகவல் தரலாம். மாவட்ட அளவில் 24 டாக்டர்கள் குழுக்கள் வீடுகள் தோறும் கண்காணிப்பில் ஈடுபடுவர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னை பஸ்கள் இயக்கப்படமாட்டாது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalairajan Krishnan - karaikudi,இந்தியா
24-மார்-202010:16:35 IST Report Abuse
Kalairajan Krishnan தமிழகஅரசும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் சுகாதரத்துறை அலுவலர்களும் சிறப்பாகச் செயல்படுகின்றனர். எனது நல்வாழ்த்துகள். 337 பேர்களை வீட்டில் தனிமையாக வைத்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறான வீடுகளைப் பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டும். அதனால் அந்த வீட்டினருடனான பழக்க வழக்கங்களை எச்சரிக்கையுடன் பொதுமக்கள் கையாளுவார்கள். எனவே இந்த 337 பேர்களது வீடுகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்டிகர் ஒட்டி அடையாளப்படுத்த வேண்டும். அவர்கள் குணமடைந்த பின்னர் இந்த எச்சரிக்கை ஸ்டிகரை நீக்கிவிடலாம். பெரு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் அன்புள்ளம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X