பொது செய்தி

தமிழ்நாடு

வறண்ட நாலுகோட்டை கண்மாய் பருத்திக்கு மாறும் நெல் விவசாயிகள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்து கண்மாய் கோடையின் தாக்கம் துவங்கிய நிலையில் வறண்டு கிடப்பதால் இப்பகுதி நெல் விவசாயிகள் பருத்தி விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.

சிவகங்கையின் உள்ள முக்கிய கண்மாய், ஏரி, குளங்கள் பெரியாறு பாசன கால்வாய் தண்ணீரால் நிரம்பும் வகையில் நீர் வழித்தடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெரியாறு பாசன நீர் வரும் கால்வாய்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால், பாசன நீர் வரும் காலங்களில் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்புவதில்லை. வானம் பார்த்த பூமியாக உள்ள நாலுகோட்டை விவசாயிகள் கோடையை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள் .


நீரின்றி வறண்ட கண்மாய்


எம்.முருகன், நாலுகோட்டை: குறிச்சிபட்டி, பெருமாள்பட்டி வழியாக வரும் பெரியார் பாசன கால்வாய் நாலுகோட்டை கண்மாயில் இணைகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கால்வாய் நீர் கண்மாய்க்கு வந்தது. தற்போது ஆங்காங்கே கால்வாய் சேதமாகி போனதால் கண்மாய்க்கு பாசன நீர் வருவது நின்று போனது. மழை பெய்யும் போது கண்மாயில் நிரம்பும் நீரை கொண்டு தான் விவசாயம் செய்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன் கண்மாயில் தேங்கியிருந்த நீர் இப்போது வற்றி விட்டது.

கண்மாயில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. கண்மாயில் உள்ள மரங்களை அகற்றி சில அடி ஆழம் துார் வாரினால் கோடை மழையில் நீர் நிரம்பி ஓரளவிற்கு தேங்கும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் வறட்சியில் கை கொடுக்கும் பருத்தி விவசாயம் செய்ய துவங்கி விட்டோம். நான் ஒரு ஏக்கர் அளவிற்கு பருத்தி பயிரிட்டு உரம் வைக்கும் பணியை முடித்து விட்டேன். கூடுதலாக மாட்டு தீவனத்திற்காக புற்களை பயிரிட்டுள்ளேன். நான் உட்பட இப்பகுதி விவசாயிகள் பலர் பருத்திக்கு மாறி வருகிறார்கள். இக்கண்மாய் தவிர நாலுகோட்டையில் உள்ள நீர் ஆதாரங்களை முறையாக பராமரித்தால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X