எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

இரு சபைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு:பாலைவனம் போல வெறிச்சோடியது பார்லி.,

Updated : மார் 24, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
இரு சபைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு:பாலைவனம் போல வெறிச்சோடியது பார்லி.,

'கொரோனா' பீதி காரணமாக, நேற்று, பார்லி மென்டின் இரு சபைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால், பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவுஅடைந்து உள்ளது
.கொரோனா வைரசால் ஏற்பட்ட பெரும் அச்சம் மற்றும் பீதிக்கு மத்தியில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. கட்சி வேறுபாடில்லாமல், எம்.பி.,க்கள் பலரும், இந்த கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.பட்ஜெட் நிறைவேற்றம், மானிய கோரிக்கை நிறைவேற்றம் ஆகியவை முடிந்த நிலையில், நிதி மசோதா மட்டும் நிறைவேற்றப்படாமல் இருந்ததால் சிக்கல் நீடித்தது.
நிதி மசோதாவுக்கு பார்லிமென்டின் இரு சபைகளும் ஒப்புதல் தந்தால் மட்டுமே, கஜானாவிலிருந்து, மத்திய அரசால் நிதியை பெற்று, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.நாட்கள் குழப்பத்துடனே நகர்ந்த நிலையில், விமான போக்குவரத்து ரத்தாக துவங்கியதால், குறித்த நேரத்திற்கு, எம்.பி.,க்களால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக, பார்லிமென்டின் அலுவல் நேரமும் மாற்றியமைக்கப்பட்டது.அதன்படி, நேற்று மதியம், 2:00 மணிக்குத்தான், பார்லிமென்ட் கூடியது. சிவசேனா, திரிணமுல் காங்., கட்சிகள், தங்கள் எம்.பி.,க்களை பார்லிமென்ட் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்த நிலையில், பா.ஜ., உட்பட மற்ற கட்சிகளின், எம்.பி.,க்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. பார்லிமென்ட் அதிகாரிகள், ஊழியர்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. எப்போதும் திருவிழா கூட்டம் போல இருக்கும் பார்லிமென்ட் வளாகம், பாலைவனம் போல வெறிச்சோடி இருந்தது.
வந்திருந்தவர்கள் முகங்களிலும் ஒருவித அச்சம் தென்படவே, மயான அமைதி நிலவியது. சபை அலுவல்கள் கூடுவதற்கு முன், முக்கிய கட்சி களின் சபைத் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசித்தனர்.நிதி மசோதாவில் திருத்தங்களை, எம்.பி.,க்கள் கோரப்போவதில்லை என, ஒருமனதாக முடிவெடுக்கப்படவே, சீக்கிரமாக அலுவல்களை முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இரு சபைகளிலும், அலுவல்கள் துவங்கியதும் விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய மூவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், லோக்சபாவில் நிதி மசோதாவை, எடுத்துக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்தார்.அப்போது, காங்., மூத்த எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''கொரோனா சூழ்நிலையை கருத்தில் வைத்து, ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்,'' என, குரல் எழுப்பினார். எதிர்க்கட்சி எம்.பி.,க் களும் இதை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியில், நிதி மசோதாவுக்கு குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்பின் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும், அலுவல்கள் துவங்கியதும், ஜம்மு காஷ்மீர் குறித்த மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. பின், அலுவல்கள் வேகமாக முடிக்கப்பட்டு, ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்., 3ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட் கூட்டத்தொடர், முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.-
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202008:19:55 IST Report Abuse
ஆப்பு ஏழைகளுக்கு நிதி குடுக்கணும்னு ஆள்பவர்களுக்கு தெரியாதா? எதிர்க் கட்சிகள் கேட்டு, உடனே குடுத்துட்டா எவன் அடுத்த முறை இவிய்ங்களுக்கு ஓட்டுப் போடுவான்? யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான்.
Rate this:
Cancel
24-மார்-202008:16:41 IST Report Abuse
ஆப்பு ஊரையெல்லாம் வுட்டு கைதட்டச் சொன்னவங்க யாரும் அவிங்க சேவையைப் பத்தி ஒரு வார்த்தை பேசலியே... நமக்குத்தான் உபதேசம். நமக்கும் herd mentality.
Rate this:
Cancel
24-மார்-202008:14:14 IST Report Abuse
ஆப்பு பாராளுமன்றம் முடக்கம்னு போட மாட்டாங்களே? எல்லோருக்கும் வீட்டுல சமையல் சாமான்கள் ஸ்டாக் இருக்கா? எங்களை மாதிரி அலையாம பாத்துக்கோங்க ராசா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X