பஸ், ரயில்களில் இருக்கை திருநங்கைகள் வழக்கு

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுடில்லி:பஸ்கள், மெட்ரோ ரயில்களில், தனி இருக்கை ஒதுக்கீடு செய்ய கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், திருநங்கைகள் மனு தாக்கல் செய்தனர்.
டில்லி உயர் நீதிமன்றத்தில், திருநங்கைகள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:பஸ்கள் மற்றம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது, எங்களை மற்றவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்; இருக்கை களில் அமர, எங்களை அனுமதிப்பதுஇல்லை. அதனால், எங்களுக்கு, மெட்ரோ ரயில்கள், பஸ்களில், தனி இருக்கை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். டில்லியில், மெட்ரோ ரயில்களில், நாங்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி, டி.என்,படேல், நீதிபதி, ஹரிசங்கர் ஆகியோர் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநங்கைகள் கோரிக்கையை சட்டத்துக்குட்பட்டும், அரசின் கொள்கைகளுக்கு உட்பட்டும் பரீசலிக்கும்படி, டில்லி போக்குவரத்து கழகம், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றை, நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X