உள்நாட்டு விமானங்களுக்கும் தடை

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுடில்லி;கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நம் நாட்டில், இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்க தடை விதித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
பயணிக்க அனுமதி'
அனைத்து உள்நாட்டு விமானங்களையும், இன்று, நள்ளிரவு, 11:59 மணிக்குள், தங்கள் இடங்களில் தரையிறங்கும் வகையில், விமான நிறுவனங்கள் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்' என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சரக்கு விமானங்கள் வழக்கம் போல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, 'வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை, உள்நாட்டு விமானங்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டாம்' என, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம், மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து, இந்தியா வந்தவர்களின் கைகளில், 'வீட்டில் தனிமையில் இருக்க வேண்டியவர்கள்' என, முத்திரையிடப்பட்டுள்ளது.
இந்த பயணியர், அவர்களின் சொந்த ஊர்களுக்கு, உள்நாட்டு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். தனிமைஇந்நிலையில், 'வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என, கைகளில் முத்திரையிடப்பட்ட பயணியரை, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில், பயணிக்க அனுமதிக்க வேண்டாம்' என, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு: கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வந்தவர்கள், கண்டிப்பாக, ௧௪ நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள், தங்கள் இருப்பிடத்தை அடைவதற்காக, உள்நாட்டு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.வெளிநாட்டு விமானங்கள், நேற்று முன்தினம் முதல் தடை செய்யப்பட்டன. அதற்கு முன் வந்த பயணியர், ௨௪ மணி நேரத்திற்குள், தங்கள் இருப்பிடத்தை அடைந்திருக்க வேண்டும்.எனவே, வீட்டில் தனிமையில் இருக்க வேண்டியவர்கள் என, கைகளில் முத்திரையிடப்பட்ட பயணியரை, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X