பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கைக்கு 2.77 லட்சம் புதிய வாக்காளர் அட்டை; தேர்தல் பிரிவு ஏற்பாடு

Added : மார் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் 4 சட்டசபை தொகுதிக்குட்பட்ட பழைய வாக்காளர் அட்டைக்கு மாற்றாக 2.77 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளது. பழைய வாக்காளர் அட்டையில் மாநிலம், சட்டசபை தொகுதிக்கென தனித்தனியாக 16 வரிசை எண்களுடன் கூடிய அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. இனி, நாடு முழுவதும் மாநிலம், தொகுதி எண்களை குறிப்பிடாமல் தொகுதிக்கு ஏற்ப 3 ஆங்கில வார்த்தை, 7 எண்கள் என 10 இலக்க எண்ணுடன் புதிய வாக்காளர் அட்டை வழங்கப்பட உள்ளன.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புத்துார், காரைக்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 939 வாக்காளர்களிடம் 16 இலக்க எண் கொண்ட பழைய வாக்காளர் அட்டைகள் உள்ளன. அவற்றை ரத்து செய்துவிட்டு, அதற்கு மாற்றாக 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்ட புதிய வாக்காளர் அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 லட்சத்து 77 ஆயிரத்து 939 புதிய வாக்காளர் அட்டைகள் சிவகங்கைக்கு வந்துள்ளன.

தேர்தல் பிரிவில் இந்த அட்டைகள் சரிபார்க்கும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்கள் வீட்டிற்கே புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும். அதே போன்று கடந்த ஒரு ஆண்டாக 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான புதிய வாக்காளர் அட்டையும் தயார் நிலையில் உள்ளன. புதிய வாக்காளர்கள் 31 ஆயிரம் பேருக்கு விரைவில் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வாக்காளர் அட்டை வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X