தமிழ்நாடு

முகக்கவசம், சானிடைசரை பதுக்கினால் நடவடிக்கை; குற்றப்புலனாய்வு துறை எச்சரிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

சிவகங்கை : மருந்து கடைகளில் முகக்கவசம், சானிடைசரை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என சிவகங்கை குடிமைபொருள் குற்றபுலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, வைரஸ் அறிகுறி தென்பட்டோர், மருத்துவமனை டாக்டர், நர்சு, ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் நாள் ஒன்றுக்கு 15 முறை சானிடைசர் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முகக்கவசம், சானிடைசர் தேவை அதிகரித்துள்ளன.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மருந்து கடைகளில் ரூ.2 க்கு விற்க வேண்டிய முக கவசத்தை 50 ரூபாய் வரை விற்கின்றனர். சானிடைசரும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க மெடிக்கல் ஷாப்களில் முகக்கவசம், சானிடைசர் பதுக்குவோரை கண்டறிய, குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.

சிவகங்கை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, எஸ்.ஐ., ஜெகதீசன், தலைமை காவலர்கள் வெள்ளைச்சாமி, சுரேஷ் கண்ணன், ஆரோக்கியசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மருந்து கடைகளில்் சோதனை மேற்கொண்டனர். முகக்கவசம், சானிடைசரை பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இது குறித்து 94981 90123, 94981 65931என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X