பொது செய்தி

தமிழ்நாடு

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வேண்டுகோள்!

Added : மார் 23, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:கொரோனா வைரஸ் பரவல தடுக்க, பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வருகின்றன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கோவை வடக்கு புறநகர் பகுதியில் பெரியநாயக்கன் பாளையம், துடியலுார் உள்ளிட்ட பகுதிகளில், வாரச் சந்தைகள் இம்மாதம், 31ம் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துடியலுார், நரசிம்மநாயக்கன் பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் உள்ள தனியார், அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்கள், நேரடியாக வங்கிக்கு வராமல், பணமில்லா பரிவர்த்தனை செய்ய குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:குறிப்பிட்ட இடத்தில் அதிக நபர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, சில வங்கிகள், செயல்படும் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளன. வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.அவசியம் இருப்பவர்கள் மட்டும் வங்கிக்கு வந்தால் போதும். மற்றவர்கள் பணமில்லா பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பரவாமல், தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X