பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் சுத்தமாக இல்லை சுகாதாரம்! 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையிலும் மெத்தனம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:'கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள், போதுமான அளவில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மேற்கொள்வதில்லை' என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ், இந்தியாவிலும் சற்று வேகமாய் பரவத் துவங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மோற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்களில், அனைவரும் கைகளை சுத்தம் செய்ய, சோப்பும், தண்ணீரும் வைக்க வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன், கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டேஷனுக்கு வருவோர் முதலில் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நகராட்சி அலுவலகத்தில், கைகளை சுத்தம் செய்ய எவ்வித வசதிகளும் செய்யவில்லை. மேலும் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கு சிறுநீரும், கழிவுநீரும் திறந்தவெளியில் தேங்கியுள்ளது. சுத்தம் செய்யாமல் அதன் மீது குளோரின் பவுடரும், லைசால் தண்ணீரும் தெளித்துள்ளனர். நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார், ''மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டை சுத்தமாக வைக்கவும், திட மற்றும் திரவ மருந்துகள் தெளிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்ய வாஷ்பேஷன் இன்னும் வைக்கவில்லை. விரைவில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X