பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி விற்பனை பாதிப்பு; உற்பத்தியை குறைக்க முடிவு!

Added : மார் 23, 2020
Share
Advertisement
 ஜவுளி விற்பனை பாதிப்பு; உற்பத்தியை குறைக்க முடிவு!

சோமனுார்;'கொரோனா' வைரஸ் தாக்கத்தால், வட மாநிலங்களில் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சோமனுார் சுற்று வட்டாரத்தில் உற்பத்தியான துணி ரகங்கள் தேக்கமடைந்து வருகின்றன.உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. சுய ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நேற்று முன்தினம் பின்பற்றப்பட்டது.பஸ் போக்குவரத்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சோமனுார் பகுதியில் குறைந்த அளவே விசைத்தறிகள் இயங்கின.இந்நிலையில், வட மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு காரணமாக, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காடா துணி ரகங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட துணி ரகம் முழுவதும் தேக்கம் அடையத் துவங்கியுள்ளது.கடந்த இரு வாரத்தில் மட்டும் பல கோடி மீட்டர் துணி ரகங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.தேங்கும் துணி ரகம்இந்த நிலை குறித்து, இரு நாட்களுக்கு முன், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். துணி ரகங்கள் தேக்கம் அடைவதாலும், நாட்டின் பல பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உற்பத்தியை குறைப்பது என, முடிவு செய்துள்ளனர்.விசைத்தறி கூடங்களுக்கு, பாவு நூல் சப்ளை செய்வதை குறைத்துள்ளனர். இதனால், விசைத்தறி கூடங்கள் இயங்குவது படிப்படியாக குறைந்து வருகிறது.விற்ற பின்னரே உற்பத்தி...ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜவுளி ரகங்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையாகாமல் தேங்கி வருகின்றன. இதனால், கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பும் வரை, உற்பத்தியை குறைப்பது என, முடிவு செய்துள்ளோம். தேங்கியுள்ள துணிகள் விற்பனையான பின்னரே உற்பத்தியை படிப்படியாக துவக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X